விதியே கதை எழுது – 9

 

எதிர்  கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன. 

அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது  ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன் மட்டும் அந்த தியான மண்டபத்தில்ஒரு தூண் ஒரமாக   சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் அந்த ஆன்மிக சொற்பொழிவின் உள் 

அர்த்தம் நிறைந்த கதையை மறுபடியும் அசை போட்டான்.  சட்டென  உடம்பு சிலிர்த்துப்போனது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது, அமைதியான அந்த இடத்தில் காதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக்குரல் எதிரொலித்தது. 

"இந்த ஜன்மாவும் நீ எனக்குக்கிடைக்காவிட்டால் , அடுத்த ஜன்மாவிலும் அதற்கு அடுத்த ஜன்மாவிலும் ,……..' 

எங்கேயோ கேட்ட குரல்! அந்தக்குரலை உணர்ந்தான் சாரங்கன். எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன, மனிதர்களைக்காணாதபோதிலும்  அடையாளம் காட்டுவது குரல்தானே?

ஒளி மறையலாம். 

ஒலி விலகுமா? கண்ணுக்குப்புலப்படாத ஒலியைக்காற்றின்வழியே பிடித்து சேமித்தும் வைத்துவிடுகிறோம். 

சாரங்கனுக்குக்கண் பனிக்க ஆரம்பித்தது. 

"மா….மாலதீ, நீயா? அன்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்  இன்று இந்த இளம் வயதிலேயே சந்நியாசினி போல ஆகிவிட்டாயா தாயே? உன் மனதை அன்று நான் புரிந்துகொண்டும் , உன்னை மனதார 

விரும்பியும்நிராகரித்ததற்கு இன்று எனக்கு ஒரு நம்பிக்கை துரோகி மனைவியாய் கிடைத்து இருக்கிறாள். மன்னிச்சிடு மாலதி இந்தப்பாவியை?' 

வாய்விட்டுப்புலம்பி விட்டான்.குரல்கேட்டு அந்த இல்லத்தின் செயலாளர் ஓடி வந்தார். 

சாரங்கனைப்பார்த்ததும் "சார்… நீங்க இன்னும்  வீட்டுக்குப்போகலயா? 

எல்லாரும்  போயிட்டாங்களே… இங்கயே தங்கலாம்னாலும் தங்கிக்கலாம்.. 

உள்ளவாங்க".என்று கனிவோடு  சொன்னார். அந்த அன்பும் கனிவும் அந்த இல்லத்தில் பணிபுரிபவர்களின் சிறப்பு குணங்கள். 

அன்புதான் அங்குதாய்மொழி. 

 அந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவரைப்பார்த்து  சாரங்கன்," "ஐயா! இந்த இல்லத்தலைவிக்கு சொந்த ஊர் எது  அவங்களோட பூர்வாங்கபேர் என்ன ?அவங்க இந்த ஸ்தாபனம் அமைக்க யார் உதவி செய்தாங்க?இதெல்லாம்கொஞ்சம் சொல்லுங்களேன் " என்று கேட்டான் 

 

"சொல்றேன்…" என்று ஆரம்பித்த அந்தபெரியவர்  முழுக்கதையை கூறி முடித்தபோது சொற்பொழிவாற்றிய அந்த்ப்பெண், கருணானந்தமயீ என்ற பெயரில் இப்போது மற்றவர்களால் அறியப்பட்டாலும் அது டில்லியில் தன்னை ஆழமாய் காதலித்த மாலதிதான்  என்பது  சாரங்கனுக்கு உறுதியாகிப்போனது. 

அவள் அப்பாவின் சொத்துக்கள்  கோர்ட்டில் கேசில் இருப்பதாக முன்பு சொல்லி இருந்தாள் .அவை  இபபொழுது கைக்குவரவும், அவள்அப்பாவும் மரணமடையவும் மாலதி பெங்களூர்வந்து அனாதை இல்லம் ஆரம்பித்திருக்கிறாள், அதுவும் சாரங்கன் குடிஇருந்த பகுதிக்கு எதிரிலேயே. 

எதிரேயே எட்டுமாதங்களாய் வந்து போய்க்கொண்டிருந்தவளை இத்தனை நாள் பார்க்காமலேயே  இருந்திருக்கிறேனா? 

"ஐயா நான் அவங்களைஉடனே பார்த்துப்பேசணும்  உதவ இயலுமா?" சாரங்கன் அவசர அவசரமாய் கேட்டான். 

'வாருங்கள்! தன்னை எந்த நேரத்தில் யார் பார்க்க வந்தாலும் தலைவி 

மறுக்கமாட்டாங்க."..அந்தப்பெரியவர் சாரங்கனை 

மாலதியின் அறைக்கு அழைத்து சென்றார். 

ஆனால் அங்கு மாலதி இல்லை 

 

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 16, 2011 @ 9:37 pm