இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 1

பகுதி – 1

இந்தியப் பிரஜை அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அடிப்படை பற்றியாவது அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக அடிப்படை உரிமைகள் பற்றி தெரிந்திருத்தல் நலம்.

Constitution of India என்றாலே அது சட்டம் சார்ந்தவர் மொழி என்ற எண்ணம் இருப்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த எண்ணம் ஒரு தவறான அனுமானம் என்றே சொல்ல வேண்டும் 

Legal System is not just for Bar and Bench என்ற Justice VR Krishna Iyer அவர்களின் தீர்ப்பு வரிகள் பொன்மொழி என்றே கொள்ள வேண்டும்.

Constitution of India (இந்திய அரமைப்புச் சட்டம்) ல் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பது மிக முக்கியமான பகுதி. ஆங்கிலத்தில் Sacrosanct என்று சொல்வார்களே அது போல மிக புனிதமானது. 

இந்த அடிப்படை உரிமைகள் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தினை இந்த தொடர் வழியே தமிழோவியம் வாகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

பல சுவையான விபரங்கள், ஆச்சரியமும், வியப்பும் ஏன் அதிர்ச்சியும் வரவழைக்கும் நீதி மன்ற தீர்ப்புகளின் சாரம் என விறு விறுப்பும் சுவாரசியமாக இந்த தொடர் இருக்கும் என நம்புகிறேன்.

இந்திய அரசியலமைபுச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பல முறை திருத்தப் பட்டிருக்கிறது. ஆயினும் Part III ஆன அடிப்படை உரிமைகள் சில முறை மட்டுமே திருத்தப்பட்டிருக்கிறது 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 395 ஷரத்துகளைக் கொண்டது. இது கீழ்க் கண்டவகையில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது 

 

பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது (அட நம்ம இந்தியாவுக்கான சட்ட ரீதியிலான பேரு) அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை இந்த மாதிரி.

பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 (ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 6 (ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 (ஷரத்து 243)  உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 (ஷரத்து 244) THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள்  நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12 (ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13 (ஷரத்து 308-323) அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது அதாங்க எமெர்ஜென்சி.

பகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில).

பகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS அப்புறம் இந்த 395 ஷரத்துகளுக்கான 12 ஷெட்யூல்கள்.

இது மொத்தமும் தாங்க நம்ம Constitution. இதில் இந்த தொடர் பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள், குறித்த ஓர் எளிய அறிமுகம் மட்டுமே 

அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாய் சில உதாரணங்களுடனும் சில வழக்கு விபரங்களுடனும் இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.

(உரிமைகள் தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 1

 • January 17, 2014 at 5:04 am
  Permalink

  samayam thodarbana adippadai urimaikalai vilakkavum orticle 24 25 26 27 28

  Reply
 • July 15, 2011 at 2:58 pm
  Permalink

  அன்பின் மௌளீ – நல்லதொரு ஆரமபம் – தொடர்க – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Reply
 • July 15, 2011 at 1:49 am
  Permalink

  ஒரு சிறந்த தொடரை அறிமுகப்படுத்திய தமிழோவியத்துக்கு நன்றி.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 14, 2011 @ 7:07 am