உள்ளாட்சித் தேர்தல்

 

இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என்று அனைத்திலும் அதிமுக வெற்றிக் கனிகளை குவித்துள்ளார்கள்.
 
வாழ்த்துகள், பாராட்டுகள்!
 
மக்கள் மடையர்களல்ல என்பது மீண்டும் நிருபனமாகியிருக்கிறது! வெறும் ஐநூறு, ஆயிரம் என்று வோட்டை விலை பேசி விடலாம் என்ற ஏதோ ஒரு கணக்கில் ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளுக்கு மரண அடி தொடர்ந்து விழுந்து கொண்டேயிருக்கிறது.
 
இதையே பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தற்போதைய ஆளும் கட்சியினரும்!
 
ஆனால் சொல்லப் போனால் அதிமுகவில் தலைமையைத் தவிர வால், கால், இடது கை, வலது கை, உலக்கை என்று கண்ட கழிசடைகளும் தன் இஷ்டத்திற்கு ஆடாது என்பது தான் நிதர்சனம்.
 
தமிழ்நாட்டை பல குறுநில மாகாணங்களாகப் பிரித்து ஆண்டு அனுபவித்த அரசர்களும், அவர்தம் அல்லக்கைகளும் ஜெயிலுக்கும், ஜாமீனுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சந்தோஷம்!
 
ooOoo
 
திருச்சி மேற்கு தொகுதியில் இடைத்தேர்தலின் போது, “இங்கே மரியம் பிச்சையின் குடும்பத்தினரை நிறுத்தியிருந்தால் நாங்கள் போட்டியிருக்கவே மாட்டோம்” என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டது. அதிமுக என்ன, உங்கள் கட்சியைப் போல வாரிசு அரசியல் கட்சியா? மரியம் பிச்சையின் உறவினர்கள் யாரும் நிற்காமலேயே பெரு வெற்றி பெற்றது அதிமுக. “காலைக் கட்டிப் போட்டு விட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளச் சொன்னால் எப்படி ஓடுவதாம்?” என்று ‘நொண்டிச்சாக்கு’ சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
 
இதோ இப்போது மரியம் பிச்சையின் மகனுக்கு திருச்சி துணை மேயர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடைசி சுற்று வரை வென்று விட்டதாகவே கருதப்பட்ட மனித நேய பண்பாளர் சைதை துரைசாமியின் வெற்றிக் கணி தட்டிப் பறிக்கப்பட்டது. இதோ அவர் தான் சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயர். மொத்தம் ஆறு மாநகராட்சிகளில் பெண் மேயர்கள். அதான் அதிமுக!
 
டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் கூட தற்காலிக முதல்வர் ஆகும் காட்சியெல்லாம் அதிமுகவில் தான் நடக்கும்.
 
“எம்.பி.ஆவணும்னா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும். அதுக்கு என் பேரன் தான் லாயக்கு” என்று ஹிந்தி எதிர்ப்புப் போராளி சொன்ன உதார் காரணங்களைப் போல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் அவ்வளவாகப் பார்க்க முடியாது.
 
அடிமட்ட தொண்டனும் கூட விசுவாசமாக இருந்தால் தக்க பரிசு கிடைக்கும் என்ற பேச்சை இன்றளவிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக.
 
அதனால் தான் செல்வகணபதிகளும், அனிதா ராதாகிருஷ்ணன்களும், இந்திரகுமாரிகளும் தான் பிரச்னை என்று கட்சி தாவி ஓடும் காட்சி நடக்குமே தவிர, எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து வைகோ, பரிதி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன் என்று எந்த உண்மை உழைப்பாளியாவது அவமானப்படுத்தப்பட்டிருக்கிறானா அதிமுகவில்?!
 
ooOoo
 
வளசரவாக்கம் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட முழு நாள் மின்வெட்டு! காலை 9 மணிக்கு சரியாக கரண்ட் கட்!
 
அது என்னவோ, இன்றைக்கு முழு நாள் மின்வெட்டு இந்த இந்த ஏரியாக்களில் என்று ஓரிரு தமிழ் நாளிதழ்களில் மட்டும் அன்றைக்கு காலையில் தான் அறிவிப்பு கொடுக்கிறார்கள். பண்பலை ரேடியோ, டிவி சானல்கள் மூலமாக முதல் நாளே இந்த அறிவிப்புகளை கொடுத்துத் தொலைத்தால் என்ன?
 
சாதாரணமாக மாலை 5 மணிக்கெல்லாம் கரண்ட் வந்து விடும். நல்ல மழை வேறு. இடுப்பளவு வெள்ளம் ஆற்காடு ரோட்டிலும். கும்மிருட்டு மாலை 3.30 மணிக்கே! அப்படியும் கரண்ட் வந்த பாடில்லை.
 
ஐந்து மணியாயிற்று, ஐந்தரை மணியாயிற்று.. வரவேயில்லை. 
 
போரூர் பகுதி மின்வாரிய உதவிப் பொறியாளரைத் தொடர்பு கொண்ட போது, “மழை பெய்யுதுல்ல.. எப்படி கரண்ட் ஆன் பண்ண முடியும்? மழை நின்னப்புறம் தான் வரும்” என்று பதில் சொன்னார்.
 
“இப்போதைக்கு மழை நிக்குற மாதிரி தெரியிலையே. எப்போ மழை நிக்குறது? எப்போ நீங்க கரண்ட் கொடுக்குறது?” என்று கேட்டேன்.
 
“அதெல்லாம் மழை நிக்கும் போது தான். இன்னைக்கு நிக்கலைன்னா இன்னைக்கு கரண்ட் கிடையாதுன்னு அர்த்தம். போய் கரண்ட் சுவிட்ச் போடும் போது ஷாக் அடிச்சா எவன் சாவுறது?” என்று கேட்டார்.
 
”என்ன சார் இப்படி பேசுறீங்க?” என்று கேட்டேன்.
 
“வேற எப்படி பேசுறது? இவ்வளவு நேரம் பேசிட்டிருக்கேனே. போததா?” என்று பதில் வந்தது.
 
“என்னவோ இலவச மின்சாரம் கொடுக்குற மாதிரியில்ல பேசுறீங்க?” என்றேன்.
 
“வேற என்ன? இது இலவச மின்சாரத்தை விட கேவலம். அட்வான்ஸ் காசா கொடுக்குறீங்க? ரெண்டு மாசம் கரண்ட் யூஸ் பண்ணிட்டு அப்புறம் தானே கொடுக்குறீங்க?” என்ற வினோதமான பதில் வந்தது.
 
அதிர்ச்சியுடன்,”என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றேன்.
 
“இவ்வளவு நேரம் மரியாதையா பேசிட்டிருக்கேனேன்னு பாருங்க. அதெல்லாம் இப்போதைக்கு கரண்ட் வராது. என்ன பண்ணனுமோ பண்ணிக்குங்க” என்று சொல்லிவிட்டு மறு பேச்சுக்கு கூட காத்திராமல் ஃபோனைத் துண்டித்தார். மீண்டும் ட்ரை செய்த போதும் எடுக்கவேயில்லை.
 
EB சேர்மேன் செல் (புகார்களுக்கு)  என்று 044-28524422 நம்பர் கிடைத்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தும், “தற்போது பிஸியாக இருக்கிறது” என்றே குரல் வந்து கொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் அதுவும், “இந்த எண் பழுதடைந்துள்ளது” என்று ஒப்பாரி பாடிவிட்டது.
 
அப்போது தான் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் சென்னை மேயர் சைதை துரைசாமி கொடுத்திருந்த மெசேஜ் நியாபகத்திற்கு வந்தது. உடனடியாக அவரது அலுவலகத்திற்கு (044-25619298 ) தொடர்பு கொண்டு அங்கே அவரது உதவியாளர் மனோகரன் என்பவரிடம் பேசினேன். “மின்வாரியம் எங்கள் கட்டுப்பாடுக்குள் வராது. என்றாலும் கண்டிப்பாக அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன். என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்” என்று உறுதியளித்தார்.
 
ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அவரே தொடர்பு கொண்டார். “சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பேசியாகிவிட்டது. இன்னமும் 30 நிமிடங்களுக்குள் கரண்ட் சப்ளை கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். மக்கள் தொடர்பில் உள்ள அலுவலர்கள் பொதுமக்களிடம்  பணிவாகத்தான் பேச வேண்டும் என்று கூறி விட்டேன். அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது தான். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். மக்கள் குறைகளைக் கேட்பதற்காகவே இங்கே 4 பேர் எப்போதும் இருப்பார்கள். அவர்களிடம் பேசியும் எதுவும் தாமதமானால் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி” என்று கூறினார் மனோகரன்.
 
அவர் ஃபோன் வைத்த ஒரு சில நிமிடங்களில் கரண்ட் வந்தது. மழை நின்றபாடில்லை. அப்போது மணி சுமார் 6.20.
 
மீண்டும் மேயர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன். “கரண்ட் சப்ளை கொடுத்தாச்சுன்னு ஈபியிலேர்ந்து ஃபோன் பண்ணிச் சொன்னாங்க. அதான் உங்களுக்கு ஃபோன் அடிச்சு சொல்லலாமுன்னு இருந்தோம்.அதுக்குள்ள நீங்களே பண்ணிட்டீங்க” என்று வேறொருவர் பேசினார். மேயரின் நேர்முக உதவியாளர் மனோகரனுக்கு நன்றியைச் சொல்லச் சொன்னேன்.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “உள்ளாட்சித் தேர்தல்

 • October 31, 2011 at 2:12 am
  Permalink

  அருமை. திருச்சி ஏர்போர்ட்டில் ப.சிதம்பரத்தை செருப்பால் தாக்கியதற்கு பரிசாக ராஜறேத்தினத்திர்க்கு எம் பி கொடுத்தார் ஜெ.
  2. உங்கள் போராட்டங்கள் தோற்று கடைசியில் மேயரின் அலுவலகம்,மூலமாக தக்க சமயத்தில் மின்சாரம் கிடைக்க பெற்றது பாராட்டுக்குரியது. மேயரின் இந்த மாதிரியான சேவை தொடர வேண்டுமாய் பிரார்த்திக்கொள்கிறேன்

  Reply
 • October 30, 2011 at 11:45 pm
  Permalink

  நண்பரே , நீங்கள் கூறிய அனைத்தும் 100 % உண்மைகள். திருச்சி மேற்கு தொகுதியில் இடைத்தேர்தலின் காலைக் கட்டிப் போட்டு விட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளச் சொன்னால் எப்படி ஓடுவதாம்?” என்று ‘நொண்டிச்சாக்கு’ சொல்லியிருக்கிறார் கருணாநிதி. என்னமோ ஜெயலலிதா தான் நேருவை நிக்க சொன்னமாதிரி கருணாநிதி உளறுகிறார் . நேருவை ஜெயிலில் இருக்கும் தியாகி என்று மக்கள் நினப்பார்கள் என்று தமிழின தலிவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார் . இவர்கள் எல்லாம், கருணாநிதி உட்பட உள்ளே போனால் தான் நமக்கு நிம்மதி

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 30, 2011 @ 11:15 pm