புதினாக்கீரையின் மகத்துவங்கள்

 

Pudina
 
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.
 
புதினா – 50
 
1. புதினா அஜீரணத்தை அகற்றும். 
2. வயிற்றுப்போக்கை நிறுத்தும் 
3. குடல்பிணிகளை நீக்கும். 
4. சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். 
5. சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். 
6. குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். 
7. ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
8. சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும். 
9. கபநோயும், வயிற்றுப்போக்கும் நீங்கும். கீல் வாத நோய்கள் கட்டுப்படும். 
10. கண் நோய்கள் நிவர்த்தியாகும். 
11. கர்ப்பகால வாந்திக்குச் சிறந்த நிவாரணியாகும். 
12. தலைவலி, நரம்பு வலி, வாத வலிகளுக்குப் பயன்படுத்தினால் நோய்கள் நிவர்த்தியாகும். 
13. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கும்  வெள்ளைப் படுதல் பெரும்பாடுகளை நீக்குகிறது. 
14. சருமப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகிறது. 
15. பொதுவில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுகிறது.
16. அசைவ உணவுகளைச் செரிமானம் ஆக்கவும் கொழுப்புப் பொருள்களைக் கரைக்கவும் பயன்படுகிறது.
17. கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது. 
18. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.
19. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
20. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.
21. வாய்த்துர்நாற்றத்தைப் போக்கும் புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது.
22. புதினாக்கீரையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டால்  தொடர்ந்து நீடிக்கும் விக்கல் குணமாகும்.
23. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
24. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
25. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். 
26. இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. 
27. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
28. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்
29. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
30. புதினா பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.
31. புதினா புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலுமிச்சை சாறு சேர்த்திருப்பது பசியின்மையையும் போக்கும்.
32. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். 
33. மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். 
34. கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.
35. புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
36. வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். 
37. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
38. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.
39. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும் 
40. புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 
41. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. 
42. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
43. மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
44. புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
45. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
46. பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
47. புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .
48. பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.
49. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.
50. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்கள், விலை மலிவாகக் கிடைக்கிறதே என்று அலட்சியப்படுத்தாமல் புதினாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அமெரிக்காவில் 99 சென்ட்ஸ் மட்டுமே, இது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு வேளை புதினா சாதத்திற்கு உதவும்.. புதினா சாதம், புதினா புலாவ், புதினா துவையல், புதினா சப்பாத்தி, புதினா சூப், புதினா இட்லி என்று பலவிதங்களில் செய்து அசத்தலாம்..
 
 
படித்தும் தொகுத்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததும் ஆதலால் உங்களுக்கும் பயன் பெறும் நோக்கில் பகிர்கிறேன். 
 
என்ன புதினா வாங்கக் கிளம்பி விட்டீர்கள் தானே ?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 21, 2012 @ 12:59 pm