ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

வாசல்

கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர்
நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம்
வீட்டின் தலைமகள்  முன்னெடுத்து, அவதரிக்க
நிலமகளுக்கு நடந்தது அலங்காரம்
திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும்
நிறத்திற்கு ஒரு முகமென ஏழும்
புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது.
வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி
சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல்

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : January 22, 2014 @ 10:38 pm