ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

விஜய் டிவியின் மோசடி

'புதிய தலைமுறை' வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் நான்,  அதில் எழுதிய கட்டுரைகளிலேயே பெருமைப்பட்டுக் கொள்ளகூடிய எழுத்தாக நான் கருதுவது ஜெரினா பேகம் என்கிற பெண்மணியின் போராட்டங்கள் நிறைந்த தன்னம்பிக்கை வாழ்க்கையைப் பற்றிய பதிவுதான். அதில் அவர் தன் காணாமல் போன எட்டுவயது குழந்தை பற்றி தெரியப்படுத்தியிருந்தார். அந்தக் குழந்தையின் படத்தையும் அந்தக் கட்டுரையில் வெளியிட்டிருந்தேன். அதைப் படித்த ரகுநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாசகி நிர்மலா என்பவர் மூலம் ஜெரினாவின் குழந்தை இருக்கும் இடம் அறிந்து ஜெரினா பேகத்தையும் அவரது மகளையும் சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவத்தை 'பிரிந்தோம்.. புதிய தலைமுறையால் சந்தித்தோம்..' என்ற followup கட்டுரையில் அப்படியே கடந்த மார்ச் 11 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் படங்களுடன் பதிவு செய்திருந்தேன்.

புதிய தலைமுறையில் வெளியான எனது அந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஏப்ரல் 13 அன்று நடிகை லட்சுமி தொகுத்து வழங்கிய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் பொய்யாக ஜோடிக்கப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது விஜய் டிவி. அதைப் பார்த்த புதிய தலைமுறை வாசகர்கள், விஜய் டிவியின் மோசடியைக் கண்டித்து, போன் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் 'புதிய தலைமுறை'யின் மூலமாக திரும்பக் கிடைத்த ஜெரினா பேகத்தின் குழந்தையை, விஜய் டிவியின் நிருபர் குழு தேடிக் கண்டுபிடித்து அந்தத் தாயிடம் சேர்த்ததாக அந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்ததுதான் வேடிக்கை!

நிகழ்ச்சி ஒளிபரப்பான மறுநாள் நான் ஜெரினா பேகத்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, 'அந்த நிகழ்ச்சியில் 'புதிய தலைமுறை' பத்திரிகை மூலமாகத்தான் காணாமல் போயிருந்த என் குழந்தை 18 மாதங்கள் கழித்து கிடைத்தது என்பதையும் அதற்காக அந்தப் பத்திரிகைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதையும் நான் தெளிவாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அதையெல்லாம் அவர்கள் காட்டாமல் கடைசி நேரத்தில் அவர்களே கண்டுபிடித்துக் கொடுத்த மாதிரி டிவியில் என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.'' என்று வருத்தம் தெரிவித்தார்.

அதைத் தொகுத்து வழங்கிய லட்சுமிக்கு வேண்டுமானால் நடிப்பு பழகிப்போன ஒன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தன்னம்பிக்கையாக தன் நாட்களை ஜெயித்துக் கொண்டிருக்கும் ஜெரினாபேகத்தையும் வற்புறுத்தி நடிக்க வைத்து இப்படியொரு மோசடியை செய்வதற்குரிய பரிதாப நிலைக்கு விஜய் டிவி தள்ளப்பட்டிருப்பதை நினைத்து வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.


புதிய தலைமுறை மார்ச் 11 இதழில் வந்த செய்தி

தொடர்புடைய படைப்புகள் :

Comments

4 Responses to “விஜய் டிவியின் மோசடி”
 1. Raja Mohamed says:

  கல்யாண குமார் இது நடிகை லக்ஷிமியின் தவறல்ல நிருபர் குழுவின் தவறு குமார் மனசாட்சி தொட்டு சொலுங்கள் இந்தியாவில் உள்ள முககால்வசி நிருபர்கள் காபி அடித்து கொண்டுதானே இருகிறார்கள்

 2. Dear Kalyan,
  Good that u have published this. As u said, it is Pitty to Vijay Tv’s action to keep their ratings. Now atlest a handful of people should knew abt the channel’s inablility. Why don’t u serve a notice to them?
  Arun

 3. Geetha says:

  Idellam Vijay TV kum pudusu alla … adan thoguppalarkum pudusu alla.. Engum mosadi..edilum mosadi…

 4. Thiruvengadam says:

  Of late it become the fashion rather any appropriate word for survival in the media world.

  Try to communicate this ACT to the mass in any LIVE programmes to escape from the Editing

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : April 28, 2010 @ 10:37 am