சூர்யாவும் சூர்ய குடும்பமும்
2008ல் தொடங்கியது சூர்யாவுக்கும் சூரியகுடும்பத்துக்குமான நெருக்கமான உறவு.
வாரணம் ஆயிரம் தயாரித்தது ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்றாலும் அதை வெளியிட்டது தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் நிறுவனம். அதற்கு அடுத்த படமான அயன் – சன் பிக்சர்ஸ் வெளியீடு. இதற்கு அடுத்த படமான ஆதவனை தயாரித்ததே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ். சமீபத்தில் வெளிவந்து வெற்றி நடை போட்ட சிங்கம் மீண்டும் சன் பிக்சர்ஸ் வெளியீடு.
ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என்று மும்மொழிகளில் வெளிவரவிருக்கும் ரத்த சரித்திரம் படத்திற்கு ‘தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால்’ தொல்லை என்று தெரிந்ததும், அதை வெளியிடும் உரிமையை புத்திசாலித்தனமாக க்ளவுட் நைன் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘ஏழாம் அறிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தான் தயாரிக்கிறார்கள்.
தொடர்ந்து ஆறு சூர்ய குடும்ப படங்கள், இது ஒரு வகையில் பாதுகாப்பு மற்றும் பப்ளிசிட்டி என்றாலும், அந்த வட்டத்திலிருந்து விரைவில் வெளிவருவது அவருடைய வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
பி.கு : சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் எல்லாம் சுத்தமான தமிழ் பெயர்கள் என்பது குறிப்பிடதக்கது.