ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

அடை

 

Adai அடை

தேவையானவை

 புழுங்கலரிசி – 1 டம்ளர்

துவரம்பருப்பு – 1/4 டம்ளர்

கருத்த உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 4

கறிவேப்பிலை – ஒரு இணுக்கு

காயம் – சிறிதளவு

 

செய்முறை

1. புழுஙலரிசி,பருப்பு வகைகளை சுடு நீரில் ஊற வைக்கவும்.

2. இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் ஊற வைத்த புருப்பு, அரிசியுடன் வெந்தயம்,காயம்,மிளகாய் வற்றல், 4 கறிவேப்பிலை,உப்பு போன்றனவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.

3. தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.

4. அவியல்,தேங்கய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி அருமையான இணை. வெல்லம் தொட்டுக் கொண்டாலும் அமிர்தம் தான்.

 

கூடுதல் குறிப்புகள்

1. மேற்கூறிய அடைக்கு அரிசி, பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதுமானது.

2. வெங்காயம் சேர்க்க விரும்புவர்கள் அடை ஊற்றும் போது வெங்காயத்தைத் தூவிக் கொள்ளலாம்.

3. புளிப்பு அடை வேண்டுபவர்கள் இந்த அடை மாவுடன் சிறிது மோர் கலந்து வார்த்து எடுக்கலாம்.

4. குழந்தைகளுக்குப் பிடித்த சத்துக்கள் நிறைந்த அருமையான சிற்றுண்டி வகையான இந்த அடையை விரைவிலும் செய்து முடிக்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Facebook Comments:

comments

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : September 28, 2010 @ 3:15 pm