கருணாநிதியும் வெங்காயமும்
December 28, 2010 by ஜெ. ராம்கி · உங்கள் கருத்து
ஜெயா டிவியில் ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் தொடர் பேட்டிகள். சோ பேட்டிதான் பிள்ளையார் சுழி. துக்ளக் தலையங்கத்தில் இருக்கும் காரம் பேட்டியில் மிஸ்ஸிங்.சூடான விஷயமென்றாலும் சுரத்தே இல்லை. பாஜகவினரை பேசவிட்டால் திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை கண்டித்துப் பேச வந்து விடுகிறார்கள். சுப்ரமணிய சுவாமியோ திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை பாராட்ட ஆரம்பித்துவிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிபார்க்கிறார்கள். திமுகவை கண்டபடிதிட்டி, காங்கிரஸ் மேல் உச்சு கொட்ட சோ மட்டுமே இருககிறார். ஆகவே இப்போதைக்கு உற்சவமூர்த்தி சோ [...]
பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை
November 16, 2010 by ஜெ. ராம்கி · உங்கள் கருத்து
ராசா புயல் கரையை கடந்துவிட்டது. மதராசிகளை கிண்டலடிப்பதற்கு இன்னொரு காரணம் சிக்கிவிட்டது. ராஜினாமா நியூஸ் எப்படியும் வருமென்று ஞாயிற்றுக்கிழமை முழுக்க கையில் காமிராவோடு காத்திருந்தார்கள். என்ன பேசவேண்டும் என்பதையும் ஸ்கிரிப்டாக எழுதி அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. துளியும் பிசகவில்லை. சசி தரூர், அசோக் சவான் வரிசையில் ராசாவையும் சேர்த்துவிட்டு டெல்லி சானல்கள் ஓய்ந்துவிட்டன. கூட்டணிக்காரர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.இதுக்கு மேல் என்னதான் செய்யறது என்று போயஸ்தோட்டமும் நொந்துவிட்டது. ஜேபிசியெல்லாம் தேவையில்லை என்று சிதம்பரமும் தீர்ப்பெழுதிவிட்டார்.சவப்பெட்டி ரெடி! கே டிவியில் [...]
2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு
November 11, 2010 by பிறை கொண்டான் · உங்கள் கருத்து
தகவல் தொடர்பு இலாக்கா 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு 2008 ம் ஆண்டு செய்தது. ஆனால் அதை 2001 ல் அமுலில் இருந்த விலைக்கே விற்றது. விற்றதிலும் முறையான விதிகளைப் பின்பற்றப்படவில்லை. தன் இஷ்டப்படி விதிகளைப் பின் தள்ளிவிட்டு, நிதி அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் கூறிய அறிவுறைகளையும் ஒதுக்கிவிட்டு விற்றது. இவ்வாறு விற்றதில் 1.76 லட்சம் கோடிகள் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தவிரவும் 2008 ம் ஆண்டு 122 புதிய லைசன்ஸ்கள் வழங்கப்பட்டன. [...]


