நான் மகான் அல்ல
August 27, 2010 by பெனாத்தல் சுரேஷ் · உங்கள் கருத்து
போதையில் வழிமாறி தவறுக்கு மேல் தவறாகச் செய்யும் இளைஞர்களை, அப்பாவை இழந்த கார்த்தி பழிவாங்கும் கதை – பழைய கதைதான், ஆனால் சொல்லிய விதம் வித்தியாசம், கார்த்திக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. இயல்பான காட்சியமைப்புகளில் நெக்ஸ்ட் டோர் இளைஞனைக் காட்டுகிறார். அப்பா அம்மா, ஏன் தங்கையைக்கூட விட்டுவைக்காமல் காசு பீராய்வது, விக்ரமன் ஸ்பெஷல் லாலலாக்களுடன் இல்லாத காதல் தோல்வியை உருக்கமாகச் சொல்லி காஜலை மடக்குவது, வேலைக்குப் போகிறேன் என்று பேங்க் கலெக்ஷனுக்குப் போய் அங்கே பேங்க் மேனேஜரின் [...]


