ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)
May 21, 2010 by லலிதா ராம் · உங்கள் கருத்து
சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் 'ராக ஸுதா ரஸ', இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் [...]


