ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்!   கண்ணீரில் மை தீட்டி, எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்!   கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்!   எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க குறிப்பேடானது நேரம் காலம் குறித்ததில் நாளேடானது நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில் நாட்குறிப்பானது; காகிதம்!   [...]

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm