பாவம், தமிழ் பிழைத்துப் போகட்டும்
November 24, 2010 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் · 10 Comments
நாட்டில் வரவர தமிழ் படுத்தும் பாடு தாங்கமுடியவில்லை! "அடேய் தமிழ் துரோகி, உன்னை விட்டேனா பார். நீ பச்சைத் தமிழனா, சிவப்புத் தமிழனா? நீ தமிழ்ப்பால் குடித்தவன்தானா அல்லது புட்டிப்பால் குடித்தாயா?" "அவனா நீயி? ஓஹோ, கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவனா?" என்றெல்லாம் மீசையை முறுக்கி, லுங்கியை மடித்துக்கட்டி உதார் விட்டு என்னை யாராவது பயமுறுத்துவதற்குமுன், கொஞ்சம் இருங்கள். சொல்லவந்ததை சரியாகச் சொல்லிவிடுகிறேன். அதாகப்பட்டது, தமிழ் சமர்த்தாக தன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழை நாம் [...]


