Tamiloviam
ஜனவரி 1 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : கட்டுப்படுத்த முடியுமா தீவிரவாதத்தை ?
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று அறிவித்ததன் விளைவாக தமிழகத்தில் நடக்கும் புலி ஆதரவு கூட்டங்களும் கோஷங்களும் வெகுவாக குறைந்துள்ளன. வரவேற்கத்தக்க இந்நடவடிக்கையால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும் பலதரப்பட்ட தலைவர்களும் தங்களது பேச்சை பெருமளவில் குறைத்துக் கொண்டுள்ளார்கள்..

உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சமீபகாலமாக தமிழகத்தில் பெரும்பான்மையாக அரசியல் தலைவர்களும் சினிமா இயக்குனர்களும் பேசிவந்தது மக்கள் மத்தியிலேயே பெருமளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாட்டின் இறையாண்மையை குலைக்கும் விதத்தில் பேசினார்கள் என்று சிலர் மீது போடப்பட்ட வழக்கும் அரசு அதிக அளவில் சிரத்தை எடுத்துக்கொள்ளாததால் கிடப்பில் போடப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் சுலபத்தில் ஜாமீனில் வெளிவர வகை செய்யப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் கொலை விஷயத்தை மையப்படுத்தி இயக்குனர் சீமான் பேசிய பேச்சுகள் தமிழக காங்கிரஸ் தலைவர்களை வெகுவாக உறுத்த - அவர்கள் கொடுத்த நெருக்கடியில் முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இப்படி ஒரு கண்டிப்பான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள - விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட இந்நடவடிக்கை பாரட்டப்பட வேண்டியதே. இலங்கைத் தமிழர்கள் மீது தமிழக மக்களும் உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இரக்கப்படுகிறார்கள் - அவர்கள் வாழ்வு மலரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதில் மாற்று கருத்து என்பதே கிடையாது.. ஆனால் உலகெங்கிலும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக தற்போது குரல் எழுப்பிவரும் பலருக்கும்   எந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளதோ தெரியவில்லை.. உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக வெறும் குரலை மட்டும் எழுப்பாமல் துன்பத்தில் வாடும் அப்பாவி மக்களுக்கான நிவாரணப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள்..

2008 ஆம் ஆண்டில் தீவிரவாதிகளால் நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளோம். தீவிரவாதம் நம் நாட்டில் பெருகிவரும் இவ்வேளையில் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தீவிரவாதிகளையும் தடை செய்யப்பட்ட இயக்கங்களையும் ஆதரித்துப் பேசுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். தீவிரவாதத்தை எந்த ஒரு மதமும் ஆதரிக்கவில்லை - மக்களும் ஆதரிப்பதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும். 2009 ஆம் ஆண்டிலாவது நம் அரசியல்வாதிகள் தீவிரவாதத்திற்கும் மத பயங்கரவாதத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.. தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தவாவது முயல்வார்களா நம் தலைவர்கள் ?

 

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |