Tamiloviam
ஜனவரி 03 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பில்லா
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

ajith,nayanatharaமற்ற மொழிப்படங்களைப் தமிழில் ரீமேக் பண்ணுவது ஒருவிதம் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ்படத்தை மீண்டும் தமிழிலேயே தயாரிப்பது இன்னொரு விதம். 'நான் அவன் இல்லை' படத்தைத் தொடர்ந்து 1980 களில் வெளிவந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லாவை அதே பேரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கதை என்னவோ அதே கதைதான். ஆனால் அதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான ஸ்டைலான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் நாயகன் ரேஞ்சிற்கு வருகிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் சூப்பர். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர அடிக்கிறார் அஜித்.

நயன்தாராவிடம் ஸ்ரீபிரியா அளவிற்கு நடிப்பு இல்லை என்றாலும் கவர்சியால் கலங்க வைக்கிறார். அவரது ஸ்டண்ட் சில இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பில்லாவின் காதலியாக வரும் நமிதா வழக்கம்போல கவர்சி காட்டுவதோடு சரி.. பிரவீணா நடிப்பை நமிதாவிடம் எதிர்பார்கவே கூடாது.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரபு. கொஞ்சம் சிரமப்பட்டு வேலுவை பில்லாவாக மாற்றும் இடத்தில் பாலாஜியை நினைவுபடுத்துகிறார். பழைய பில்லாவில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்த ரோலில் ரகுமான்.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார் ரகம் தான். பழைய பில்லா பாடல்களில் இருந்த இனிமை இதில் இல்லையே என்று ஏங்கவைக்கிறார். சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.

காலத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பழைய பில்லா மாதிரியே இதுவும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததால் முடிவை நெருங்க நெருங்க கதை கொஞ்சம் தொய்கிறது. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா.

| | | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |