ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : குற்றவாளிகளை உருவாக்கும் அரசு
    - மீனா
    | Printable version |

    புவனேஷ்வரில் அதிகாரிகளின் தவறால் ஒரு இளைஞர் 13 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஒரு கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பிரதாப் என்ற 15 வயது சிறுவன் தான் இந்த இளைஞர். அவர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்த பிறகு நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த உத்திரவை சமர்பிக்கவேண்டிய நீதித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் பிரதாப் மேலும் 8 வருடங்களைச் சிறையிலேயே கழித்துள்ளார். மொத்தத்தில் செய்யாத குற்றத்திற்காக 13 வருடங்கள் ஜெயில் வாசம் பிரதாபிற்கு.

    இந்த இளைஞர் சிறையிலிருந்து வெளிவரும் போது சமூகம் அவர் மீது நிச்சயமாக " கொலைகாரன்!! 13 வருடங்கள் சிறையில் இருந்தவன்!! " என்று முத்திரை குத்தப்போகிறது. மக்களின் ஏச்சுகளும் பேச்சுகளும் பிரதாப்பைக் குதறியெடுக்கப்போகின்றன. நடந்தவை அனைத்தும் ஒரு சிறிய தவறு என்றோ, அதிகாரிகளின் அலட்சியமென்றோ அரசும் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அப்படியே ஒத்துக்கொண்டாலும் மக்கள் அதை நம்பப்போவதில்லை.

    நாட்டில் பெருகியிருக்கும் தீவிரவாதத்திற்கு இத்தகைய அலட்சிய செயல்களும் ஒரு முக்கிய காரணமாகும். அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் இப்படி அநியாயமாக தண்டிக்கப்படும் இளைஞர்களை கொம்பு சீவி தங்கள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்வதே தீவிரவாத இயக்கங்களின் முக்கிய வேலை. இந்நிலையில் அரசாங்கத்தால் தன் வாழ்கையின் 13 வருடங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் பிரதாப்பும் இத்தகைய ஏதாவது அமைப்பில் சிக்கினால் நிச்சயம் அவர் மனதில் எரிந்து கொண்டிருக்கும் கனலை ஒரு பெரிய தீயாக ஊதிவிடுவார்கள் தீவிரவாதத் தலைவர்கள். விளைவு நாடு மற்றொரு மிகப்பெரிய சமூக விரோதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    மக்களுக்கு எல்லா விதங்களிலும் பாதுகாப்பை கொடுப்பதே நீதித்துறை மற்றும் காவல்துறையின் கடமை. அந்த துறை சார்ந்த அதிகாரிகளே இத்தகைய தவறுகளை இழைக்கும்போது அதை என்னவென்று சொல்லுவது? பிரதாப் விஷயத்தில் தவறு செய்த காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மீது மத்திய - மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வாழ்கையைத் தொலைத்த பிரதாப்பிற்கு நல்ல தொழில் ஒன்றை அமைத்துத் தர அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் இத்தகைய தவறுகள் நடைபெறுவது கொஞ்சமாவது குறையும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |