ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கட்டுரை : சங்கரமடம் சந்தேகங்கள்
    - மீனா
    | Printable version |

    இரண்டு மாதங்களுக்கு முன்பாக தீபாவளி அன்று காஞ்சி சங்கராச்ச்சாரியார் ஜெயேந்திரர் சங்கர் ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது நாடே கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. ஆனாலும் வடமாநிலங்களில் ஏற்பட்ட அளவிற்கு அதிர்சியோ, கலகங்களோ தமிழகத்தில் ஏற்படவில்லை. முக்கிய காரணம் - மாநில முதல்வரின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை. " மடத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர் - ஆன்மீக விஷயங்களில் மிகவும் பற்றுதல் உடையவர். இத்தகையவர் அவசரப்பட்டு ஆச்சாரியார் மீது இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கமாட்டார். நிச்சயம் ஏதாவது வலுவான ஆதாரம் சிக்கியிருக்கும்.." இந்த ரீதியில் தான் மக்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர மாநில அரசின் தலைமையின் மீது பெரும்பான்மையான மக்களுக்கு இந்த விஷயத்தில் எந்த அதிருப்தியும் தோன்றவில்லை.

    ஆனால் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனாகக் கருதப்பட்ட கதிரவன் போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டியவுடன் வழக்கின் போக்கு மாற ஆரம்பித்தது தான் மக்கள் மத்தியில் சந்தேக விதைகளைத் தூவ ஆரம்பித்தது. தேவையே இல்லாமல் ஜெயேந்திரர் மீது ஏகப்பட்ட வழக்குகளைப் போடுகிறார்களோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்தது. இவ்வழக்குகள் அனைத்தும் உண்மையானதாகவே இருக்கலாம் - இருந்தாலும் அரசு இந்த வழக்குகளில் காட்டிய தீவிரம் ஆட்சியாளர்களுக்கும் காஞ்சிமடத்திற்கும் ஏற்பட்ட ஏதாவது ஒரு மோதலின் வெளிப்பாடோ என்று நினைக்கத் தூண்டியது.

    அனைத்திற்கும் சிகரம் வைத்ததைப் போல உச்சநீதிமன்றத்தால் ஜாமின் வழக்கப்பட்டு ஜெயேந்திரர் சிறையிலிருந்து வெளிவந்த அதே நாளில் விஜயேந்திரரை சங்கர் ராமன் கொலை வழக்கிற்காக கைது செய்துள்ளது தமிழக அரசு. மடத்தின் முக்கிய நிர்வாகி சுந்தரேச ஐயர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமிருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி வருகிறது அரசு. மேலும் காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி மடத்தின் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலி ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு. மடத்தின் 2500 வருட கால சரித்திரத்தில் இது போன்ற இடையூறு ஏற்படுவது இதுவே முதன் முறை.

    இவைகளைப் பார்க்கும் பொழுது நடந்தவை - நடப்பவை அனைத்தும் தற்செயலான விஷயமாக - ஒரு சாதாரண வழக்கை அரசு ஏற்று நடத்தும் விதமாகத் தோன்றவில்லை. மடத்தின் சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசே எடுத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளதாக பலரும் கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடம் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதை மற்ற அரசியல் கட்சிகள் பூதாகாரமாக்குவதற்குள் பிரச்சனைக்கு முடிவு காணவேண்டியது தமிழக அரசின் கடமை. சங்கராச்சாரியார்கள் மீதான குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்து வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும். இல்லையென்றால் அரசு மீது தீராத களங்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட மோதல்களுக்கும் இவ்வழக்கு வழிவகுக்கும்..

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |