ஜனவரி 19 2006
| சென்ற இதழ்கள் |
|
|
|
|
போட்டி : குறுமொழி & நெடுங்காதல் |
|
- [feedback@tamiloviam.com]
|
|
|
|
காதல் பலவகைப்படும்.
சங்க காலத்துக் காதல் இலக்கணத்துக்குட்ப்பட்டது. வெண்பா, கழிநெடிலடி ஆசிரியப்பா, என்று அளவை போட்டு முறைப்பெயராக எழுதுவார்கள். இலக்கியத்தரமாய் புரியாத வார்த்தைகள் கொண்டிருத்தல் தெரிநிலை வினை.
அடுத்த காதல் புதுக்கவிதை. நிறைய நிறுத்தற்குறிகள்........... சொல்லாத சொற்களை fill in the blanks போட்டுக் கொள்ளும்.
சமீப காலம் வரை C++ நிரல் எழுதுவது போல் பொருட்களின் குணாதிசயங்களை ஹைகூவாக்கி காதல் சொன்னார்கள். ஆனால், ஹைக்கூவிற்கும் வில்லன்கள் வந்தார்கள். முதல் வரியில் இம்புட்டு ஓசை; மூன்றாம் வரியைத் தாண்டி நான்கு ரன்களுகு செல்லக் கூடாது என்று கட்டளைகள் வந்து கொண்டிருக்கிறது.
காதல் போன்ற கட்டுபாடுகளற்ற மகிழ்ச்சிக்கு ஏற்ற உருவம் எஸ்.எம்.எஸ். (SMS). பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது தோன்றியதை உடனடியாக தோழிக்கு அனுப்பலாம். பின்னால் முடிச்சுப் போட்ட துப்பட்டாவுடன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக நிற்கும்போது மனதில் உதிப்பதை தோழருக்கு அஞ்சல் செய்யலாம். நண்பர்கள் அனுப்புவதை மேம்படுத்தி, ·பார்வார்ட் செய்யலாம்.
நவீன காலத்துக்கு குறுமொழியே எளிதாக விளங்குவதால், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழோவியமும் 'குறுமொழி & நெடுங்காதல்' போட்டிக்கு தங்களின் எஸ்.எம்.எஸ். காதல்மொழிகளை அனுப்புமாறு அழைக்கிறது.
எஸ்.எம்.எஸ்.ஸின் மூர்த்தி சிறிதாக இருந்தாலும், எளிதாக அனுப்புநரை சென்றடைவதால் கீர்த்தி பெரிது. எனவே, நீண்ட காவியங்களைத் தவிர்க்கவும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களின் பெயரும் மின்னஞ்சல் முகவரியையும் அவசியம் இணைத்து மறுமொழியாக இங்கே இடுவதுதான்.
சிறந்த மூன்று குறுமொழிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பின்னூட்ட வேண்டிய கடைசித் தேதி: காதலர் தினம் - ·பெப்ரவரி 14, 2006 நள்ளிரவு (இந்திய நேரம்). ஒருவரே எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் உதிர்க்கலாம்.
அனுப்புங்க... அனுப்புங்க... அனுப்பிகிட்டே இருங்க
(மேலே உள்ள 'ஓவியா' படத்தினை வரைந்த ஓவியர் நியுஜெர்சியை சேர்ந்த : அனுஷா சுப்பிரமணியம்)
SMS | போட்டி | காதலர் தினம் | ஓவியா
|
| oooOooo |
 |
அவர்களின் இதர படைப்புகள். |
|
 |
போட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
உங்கள் கருத்து  |
பாலாஜி
1/23/2006 , 3:01:38 PM
[Comment
url]
|
சொந்தமாக உல்டா செய்த சில எஸ்.எம்.எஸ்.கள்....
தீபாவளி லைட்ஃபுல், பொங்கல் ஸ்வீட்ஃபுல், ஹோலி கலர்ஃபுல், ஃபிரண்ட்ஷிப் பவர்ஃபுல், நீ இருந்தால் லைஃப் ஃபுல்! --------------------------------------
தேங்காய், பழம், ஊதுபத்தியோட எல்லாரும் கோயிலுக்குப் போவாங்க... நான் மட்டும் உன்னோடுதான் போவேன் --------------------------------------
"பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே" இடைப்பட்ட வாழ்க்கையில்தான் நாம காமத்துப்பாலில் ஊன்ற முடியும். ஏண்டீ... ஏண்டீ... படிக்கலாம் வாடீ! --------------------------------------
அறுத்து எடுத்தாத்தான் நெல்லு! அடிக்கடி விளக்கினாத்தான் பல்லு! அம்பு விட்டாத்தான் வில்லு! அன்பே முத்தம் கொடுத்தாதான் காதலு! --------------------------------------
|
| |
|
ashok
1/24/2006 , 5:35:31 PM
[Comment
url]
|
வருடத்தில் எல்லா நாட்களும் பெப்ரவரி- 14 ஆக அறிவித்து விடுவேன்
துக்ளக்
|
| |
|
ஜி.கண்ணன்
2/10/2006 , 5:06:05 AM
[Comment
url]
|
குறுமொழி & நெடுங்காதல்
'ராங் நம்பர்' என்று எடுத்தவுடன் கட் செய்யும் எனது எண், இன்றாவது உன்னால் ரைட் நம்பராக மாறும் என்று இந்த காதலர் தினத்தில் காத்திருக்கிறேன் !
**************
என்னுடைய செல்களில் உன்னுடைய உணர்வு, உன்னுடைய செல்லில் எனது குறுந்தகவல் ! அது என்ன கேட்கப்போகிறது ? அதிகபட்சம் உன் இதய செல்லின் திறவுகோள் எனக்கு கிடைக்குமா ?
**************
எனக்கு நீளமான தலைமுடி இருந்தால் இந்நேரம் ரெமோ வாக மாறி முன்னால் வந்திருப்பேன், இருந்தாலும் நான் பேரழகன். ஜோதிகாவாக மாறி என்னை ஏற்றுக்கொள்வாயா ?
**************
ப்ரி பெய்டா போய்கிட்டு இருக்கும் நம்ம காதல், எப்பொழுது போஸ்ட் பெய்டாக மாறும், ரோஜாகள் வாங்க கூட காசில்லாமல் எல்லாவற்றையும் சுண்டலுக்கே அழுத உன் லவ்வர்
**************
சென்ற காதலர் தினத்தில் புண்ணகைத்தாய், இந்த காதலர் தினத்தில் ரோஜாவுடன் காத்திருக்கிறேன், ஏற்றுக்கொள் இல்லையென்றால் ஆளை மாற்றிக்கொள்கிறேன் !
**************
காதல் புனிதமானது, ஆகவே பிடிக்கவில்லை என்றால், என்னுடைய இந்த குறுந்தகவலை உன்னுடைய தங்கைகோ, தோழிக்கோ பார்வோர்ட் செய்துவிடு !
**************
சொந்தமா செல் வாங்க வக்கில்லாத உன் காதல் குறுந்தகவல், அது எனக்கு வெறுந்தகவல் தான், நேரத்தை வீணடிக்காமால் வேறு ஆளைப்பார் !
**************
இந்த தடவையாவது, உருப்படியா வேளைத்தேடு இல்லையென்றால், என் அப்பாவிடம் எனக்காக மாப்பிள்ளை தேட சொல்லிவிடுவேன் !
**************
நீ டெலிபோன் மணிபோல் சிரிக்கவில்லை, என் கைதொலைபேசித்தான் உன்போல் சிரிக்கிறது ! ஆம் என் கைதொலைபேசி அழைப்பில் பதிவு செய்யப்பட்ட உன் சிரிப்பு !
**************
நம் இதயங்கள் இடம் மாறுகிறதோ இல்லையோ, நிச்சயம் நம் குறுந்தகவல்கள், நம் கைதொலைபேசியில் அடிக்கடி இடம் மாறுகிறது !
**************
உன் கைதொலைபேசி எண்ணை நீ எனக்கு தெரிவித்த நேரம், அது என் காதலை, நீ ஏற்றுக்கொள்வதை சொல்லாமல் சொல்லிய பொன்னான நேரம் !
**************
உன் அழைப்பில்லாமல், என் கைதொலைபேசி அடிக்கடி துடிக்கவிட்டால், அதிகமாக துடிப்பது என் இதயம் தான் !
**************
காதோடு பேச தயங்கும் உன் காதல் மொழிகளை என் கண்ணோடு பேசும் உன் குறுந்தகவல்களால், என் மனதில் ஆயிரம் குறுகுறுப்பு !
**************
ரஜினியிடமிருந்து ...
சில காதலுக்கு பின் கல்யாணம் இருக்காது, சில கல்யாணத்துக்கு பின் காதல் இருக்காது, கல்யாணம் பண்ணிகிங்க, ஆனா தாய மறந்துடாதிங்க,
கமலிடமிருந்து ... நாமளும் காதலிக்கிறோம், நாயும் காதலிக்குது நம்ம காதல் கோர்டுக்கு போவுது, நாய் காதல் ரோட்டுக்கு போவுது, ஒரே காதல் ஊரில் இல்லையடா மவனே !
விஜயிடமிருந்து ... பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பழசுங் கண்ணா, குத்துப்பாட்டு, எட்டி உதை இது புதுசுங்கண்ணா லவ் பண்ணு கூடவே, கட்டிப்பிடி கட்டிப்பிடிடா ...
அஜித்திடமிருந்து ... ஹீரோயின் ஹீரா, சாரி... காதல் ஹீரோயின், காதல் ஹீரோவ லவ் பண்றப்ப மனசு தான் முக்கியம், கண்ணு முக்கியமல்ல, அந்த காதல் கோட்டைதான் உறுதியானது.
விக்ரமிடமிருந்து ... எவனாவது லவ் பண்ணி கற்பமாக்கிட்டு, அல்லது எவளாவது டாட்டா கட்டிட்டு ஒடிட்டா, எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க அவுங்களை எச்சில் தண்ணியில முக்கி ஜலசமாதிபோகம் பண்ணிடுறேன்
சூர்யாவிடமிருந்து ... காதலி பெயரை கண்டிப்பா கையில பச்சகுத்திகணும் அப்பதான் 15 நிமிசத்துக்கு ஒருதடவை காதலியை மாத்தாம இருக்க முடியும்
சிம்பு ... இரண்டு முனுதடவை எஸ்.எம்.எஸ் பண்ணாம உட்டுட்டேன் அதனால நீ முந்திக்கிட்ட, இனி பாரு, என்னோட எஸ்.எம்.எஸ் எங்கெல்லாம் போகுதுன்னு.
ஜி.கண்ணன் |
| |
|
K.Sayeeram
2/10/2006 , 2:58:50 PM
[Comment
url]
|
காதலர் தினப் போட்டி - குறுமொழி நெடுங்காதல் -----------------------------------------------
1. காதலுக்குச் சிறந்த நாளு வரப் போவுது பிப்ரவரி பதினாலு ஏ என்னோட வாலு- என்னைப் பார்த்து சொல்லுவியா இது நம்ம ஆளு.
******************************************************************************************************** 2. கண்ணே!. உனக்காகக் காதலன் நான் காத்திருக்கலாம் காதலர் தினம் காத்திருக்குமா? அடுத்த காதலர் தினத்தில் நாம் எங்கெங்கே எப்படி எப்படி இருப்போமோ? நேரம் பொன்னானது-அதனால் இப்போழுதே காதலிப்போமா?
********************************************************************************************************
3. காதலியே, கடற்கரையில் உனக்காகக் காத்திருந்து காற்று வாங்கியது தான் மிச்சம் நீ வராவிட்டால் கூடப் பரவாயில்லை அசின் போல் இருக்கும் உன் தோழி லீலாவையாவது இங்கு அனுப்பி வையேன் இப்படிக்கு, உன் உண்மைக் காதலன்.
********************************************************************************************************
4. அழகுக்கு ஐஸ்வரியா திறமைக்கு சானியா அன்பே தானியா! காதலிக்க வாரியா?
********************************************************************************************************
5. குமா.......ரி, என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்கி நிக்குது குமாரி, என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி காதலர் தினக் கொண்டாட்டம்னு என் பர்ஸுக்கு இப்படி வேட்டு வச்சா?
********************************************************************************************************
6. தேவதையே! நீ சிரிக்கும் போது பகலில் நட்சத்திரங்கள் சிதறுவதைப் பார்க்கிறேன் சிரிக்காதே காதலர்தின வாழ்த்துக்களுடன், உன் அன்புப் பொய்யன்
******************************************************************************************************* 7. கோவிலுக்குப் போனா பக்தியோடப் போகணும் தியேட்டருக்குப் போனா சந்தோஷமாப் பொழுது போக்கணும் காதலர்தினம்னா மனசுக்குப் பிடிச்சவனை லவ் பண்ணனும் ஐ லவ் யூ சொல்லுடி என் செல்லம்.
******************************************************************************************************** |
| |
|
Gayathri
2/13/2006 , 5:28:22 PM
[Comment
url]
|
குறுமொழி - நெடுங்காதல் -------------------------------------------------------------------------- "பிப்ரவரி 14 விண்ணுக்கும் மண்ணுக்கும் வசந்தம் தந்த நாளுக்கு வாழ்த்து மலர்கள்" -------------------------------------------------------------------------- "உனக்கு வேப்பங்காய் எனக்கு வெல்லக்கட்டி காதலர்தினம்" -------------------------------------------------------------------------- "வில்லுக்கு விசயன் மல்லுக்கு வீமன் தில்லுக்குப் பலராமன் சொல்லுக்குக் கம்பன் காதலுக்கு நான் மோதலுக்கு நீ-இருந்தாலும் எனக்கு நீ உனக்கு நான்" -------------------------------------------------------------------------- "காதலர்க்கு ஓர் தினம் காதலர் தினம் காளையர்க்கு ஏற்ற தினம் காதலி காதலை ஏற்ற தினம் காதலை ஏற்பாயா? மறுப்பாயா? ஏற்றால் காதலன் ஆவேன் ஏற்கா விட்டால் நண்பனாவேன்" -------------------------------------------------------------------------- "என் காதலுக்குப் பதில்மொழியாக நறுக்கென்று நாலே வார்த்தைகளில் சுருக்கென்று இதயத்தைத் தைத்தது நீ செல்லினால் சுட்ட தகவல் 'அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்" -------------------------------------------------------------------------- "³ §†ð ä சொல்லினால் சுட்ட சொல் உள்ளாறும் - ஆறாதே செல்லினால் சுட்ட குறுந்தகவல்" -------------------------------------------------------------------------- "உன் அழைப்பு வரும் போதெல்லாம் அதிகமாய்த் துடிப்பது செல்பேசியில்லை-உன்னை நேசிக்கும் என் இதயம் தான்" -------------------------------------------------------------------------- (காதலனிடமிருந்து காதலிக்கு எஸ்.எம்.எஸ் வருகிறது)
"ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு"
காதலியின் புலம்பல்: "காதலர்தினத்துக்கு ஆசையா ஒட்டியாணம் கேட்டா தங்கம் விக்கிற விலையில வாங்கித் தர முடியாதுனு சொல்ல வேண்டியது தானே" --------------------------------------------------------------------------
|
| |
|
kesavasarma
2/14/2006 , 9:17:17 AM
[Comment
url]
|
ரொம்ப நல்லா இருகு ராஜா |
| |
|
|
| (You may need to disable your pop-up blocking software in order to post a comment.) |
|
|