ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரைவிமர்சனம் : மீசை மாதவன்
    - மீனா
    | Printable version |

    காலம் காலமாக சினிமா உலகில் சுற்றி வரும் காணாமல் போன மகன், அவனைக் கண்டுபிடிக்கும் பெற்றோர் - இதுவே மீசை மாதவனின் ஒன் லைன் கதை.

    டாக்டர் ராஜீவ் சரியான நேரத்தில் வைத்தியம் செய்யாததால் தனது ஒரே மகனை இழந்துவிடுகிறார் நாடோடியான மணிவண்ணன். டாக்டரின் மீதான கோபத்தில் அவரது மகனைத் தூக்கிச் சென்று தன் மகனாக வளர்த்து வருகிறார். அந்தப் பிள்ளைதான் ரமணா. மணிவண்ணன் மறைவிற்குப் பிறகு ரமணா இளவரசு மற்றும் தங்கராஜின் நண்பராகிறார். இந்நிலையில் அந்த ஊரில் சர்கஸ் நடத்த வரும் குட்டி ராதிகாவுடன் ரமணா முதலில் மோதுகிறார். பிறகு காதலிக்கிறார்.  ஒருநாள் டிரம்பட்டில் ரமணா ஒரு குடும்பப் பாடலை வாசிக்க - அதைக் கேட்கும் ஆனந்தராஜ்(குட்டி ராதிகாவின் அப்பா) ரமணாவை தன் அக்காள் மகன் என்று அறிவிக்கிறார். உடனே ரமணா - ராதிகா திருமணத்தையும் நடத்த திட்டமிடுகிறார்.

    ஒருநாள் ரமணாவின் குடும்பப்பாட்டை எதேச்சையாகக் கேட்கும் ராஜீவ் உடனே அவர் தன் மகன் என்பதைக் கண்டுபிடிக்கிறார். மகனையே கடத்திக் கொண்டு போகிறார். பாசத்தைக் கட்டாயமாகத் திணிக்க ராஜீவ் குடும்பத்தினர் முற்படுகின்றனர். ஆனால் ரமணாவோ மணிவண்ணன் தான் தன்னுடைய அப்பா என்று நம்புகிறார். அவருக்கு ஆதரவாக ஆனந்தராஜும் களத்தில் இறங்க ஒரே அடிதடி!! ரமணா யார் பிள்ளை என்பதே கிளைமாக்ஸ்..

    கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன கதை.. ஜீவனே இல்லாமல் நடித்திருக்கும் நடிக - நடிகைகள்.. இதுவே மீசைமாதவன். (இந்தப் படத்திற்கு ஏன் இந்த டைட்டில் என்று ஒரு தனி ஆராய்சி வேறு செய்ய வேண்டியுள்ளது). படம் துவங்கி ரொம்ப நேரம் கழித்துதான் ரமணா வரவே செய்கிறார். அதுவரை.. இளவரசுவும் தங்கராஜும் நகைச்சுவை என்ற பெயரில் என்னவோ செய்கிறார்கள். கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் பல காட்சிகளில் எரிச்சலும் மண்டிக்கொண்டு வருகிறது. யார் ஹீரோ என்பதில் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தும் அளவிற்கு இளவரசு - தங்கராஜ் இருவரும் படத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.

    ரமணா மற்றும் குட்டி ராதிகா இருவரின் நடிப்பும் வெகு சுமார். (குட்டி ராதிகாவிற்கு மேக்கப் போட்ட புண்ணியவாண் யாரோ.. இதை விடக் கேவலமாக எந்தப் படத்திலும் எந்த ஹீரோயினும் நிச்சயமாக மேக்கப் போட்டிருக்க மாட்டார்!) மணிவண்ணன் இரண்டு சீன்களில் தலையைக் காட்டுவதுடன் சரி. சரண்யாவின் நடிப்பு ஓக்கே.. மற்றபடி ராஜீவ், ஆனந்தராஜ் போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவே!!

    இசை, ஒளிப்பதிவு எல்லாம் ரொம்ப சுமார். திரைக்கதை - இயக்கம் ராமு. படத்தைப் பற்றி பாராட்டிப் பேச ஒரு விஷயமும் இல்லாதது துரதிஷ்டமே!! இயக்குனர் நிச்சயமாக கதை, திரைக்கதை, நடிக நடிகையர் தேர்வு மற்றும் அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் வெகுவிரைவில் கோடம்பாக்கத்திற்கு டாடா காட்ட வேண்டியிருக்கும்.

     

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |