பிப்ரவரி 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தேவை நிதானம்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

டென்மார்க் நாட்டு பத்திரிக்கை ஒன்றில் கடந்த வாரம் வெளியான முகமது நபி குறித்த கார்ட்டூனால் முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பால் முதலில் மன்னிப்பு கேட்க மறுத்த அந்த பத்திரிக்கை நேற்று மன்னிப்பு கேட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பத்திரிக்கை மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று அனைவரும் நினைக்க - பிரச்சனையை மேலும் பெரிதாக்குவதைப் போல சம்மந்தப்பட்ட கேலிச்சித்திரத்தை நார்வே நாட்டு பத்திரிக்கை ஒன்று மறு பிரசுரம் வேறு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய கேலிச் சித்திரத்தை வெளியிட்ட டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டுள்ளனர். லெபனான் மற்றும் சிரியா தலைநகரில் உள்ள டென்மார்க், நார்வே தூதரகங்களுக்குத் தீ வைக்கும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தோனிசியா, ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த எதிர்ப்பு பேரணிகளில் டென்மார்க், நார்வே நாட்டுக் கொடிகள் கொளுத்தப்பட்டுள்ளன.

"வன்முறைச் சம்பவங்கள் நடைபெறக்கூடாது. வன்முறையால் இழப்புகள் தான் அதிகமாகும். எனவே மக்கள் அமைதி காக்க வேண்டும்!" என்று துருக்கி, ஸ்பெயின் பிரதமர்கள் அறிக்கை விட்டுள்ளபோதிலும் அந்நாட்டு மக்கள் அமைதியடைந்ததாகத் தெரியவில்லை.

பத்திரிகை சுதந்திரம் மேலானது. என்றாலும் பத்திரிகைகளுக்கு பொறுப்பும் அதிகம். மாநில, தேச, உலக அளவில் நடக்கும் அநியாயங்களையும் அவலங்களையும் அம்பலப்படுத்துவது, நாட்டு மக்களின் நிலையை அரசுக்குத் தெரியப்படுத்துவது - அரசின் நிலையை மக்களிடம் எடுத்துக்கூறுவது போன்றவை பத்திரிகைகளின் தலையாய கடமை. நகைச்சுவைக்காக என்றாலும் மற்றவர்களது மனம் புண்படுமாறு நடந்து கொண்டால் சம்மந்தப்பட்ட பத்திரிகை உடனடியாக மன்னிப்புக் கேட்பதுதான் நியாயம். அதிலும் உலகமெங்கும் பரவியுள்ள ஒரு மதத்தின் இறைதூதராகக் கருதப்படுபவரைப் பற்றிய கேலிச்சித்திரத்தை பிரசுரிப்பது என்பது தேவையே இல்லாத ஒரு விஷயம். இப்பிரச்சனையால் உலகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டும் மன்னிப்பு கேட்க ஒரு வாரம் அவகாசம் எடுத்துக்கொண்டது அப்பத்திரிகையின் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுகிறது. இவர்களது பொறுப்பற்றத் தன்மையால் உலகெங்கிலும் டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயருக்கும், முஸ்லீம் நாடுகளில் வாழ்ந்து வரும் இந்நாட்டு மக்கள் படும் துயரங்களுக்கும் சம்மந்தப்பட்ட பத்திரிகைகள் என்ன பதிலைச் சொல்லப்போகின்றன?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் பொறுத்த மட்டிலும் உலகிலுள்ள அனைத்து முஸ்லீம் மக்களும் தீவிரவாத செயல்களைச் செய்பவர்கள் என்ற எண்ணம் பரவியிருப்பது கண்டிக்க வேண்டிய - அந்நாட்டு மக்கள் மனதிலிருந்து மாற்றப்படவேண்டிய விஷயமாகும். சில விஷமிகள் தீவிரவாதிகள் என்ற போர்வையில் செய்யும் அராஜகச் செயல்களுக்காக ஒட்டு மொத்த முஸ்லீம் இன மக்களுடைய மனமும் புண்படுமாறு செய்திகளை வெளியிட்ட சம்மந்தப்பட்ட பத்திரிகைகளை கண்டிக்க வேண்டிய பத்திரிகை சமுதாயத்தின் கடமையாகும். அதை விடுத்து "கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது, எங்களுக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்வது எல்லாம் எங்களது சுதந்திரம்.." என்றெல்லாம் வீண் பேச்சு பேசுவது வேலைக்கு ஆகாது.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |