|
தமிழறிஞர், அவதானக் கலைஞர், செய்குத் தம்பி பாவலர் அவர்களின் சுவையான சிலேடைகள் மிக ரசிக்கத்தக்கவை. அவற்றில் சில...
1. ஒருமுறை நண்பர் ஒருவரது இல்லத்தில் நடந்த திருமணத்துக்குப் பாவலரால் செல்ல இயலவில்லை. மறுமுறை அந்த நண்பரைச் சந்திக்க நேர்ந்த போது திருமணத்துக்கு வரஇயலாமைக்கு வருத்தம் தெரிவித்த பாவலர்,
'முகப்பருவரலால் மிகப்பருவரலுற்றேன். வர இயலவில்லை" என்றார்.
'முகத்தில் பரு வந்த காரணத்தால், மிகத் துன்பமுற்றேன்' என்று பருவரல் (துன்பம்) என்னும் சொல்லை சிலேடையாக க் கூறி அனைவரையும் ரசிக்க வைத்தார்.
2. ஒரு சமயம் பாவலர் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது 'கொல்லாமை' என்னும் சொல் கையாளப்பட்டது.
அச்சொல்லை, கொல்+ஆ+மை எனப்பிரித்து, ஆ=பசு, மை=செம்மறி ஆடு என்று பொருள் கூறி, கொல்லாமை என்றால் பசுவையும், செம்மறி ஆட்டையும் 'கொல்' என்று பொருள் வருவதாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
3. எப்போதும் பெருமை நாயகம் புகையிலைச் சுருட்டையே விரும்பிப் புகைக்கும் பழக்கமுடையவர் பாவலர். ஒரு சமயம் அவர் அதைப் பற்றவைக்கும்போது அணைந்து கொண்டேயிருந்த து. அப்போது அவர் கூறினார் :
'பெருமை நாயகம் புகையிலை, பெருந்தீ வைத்தும் புகையிலை!'
அவரது சிலேடையை ரசித்து அனைவரும் சிரித்தனர்.
|