Tamiloviam
பிப்ரவரி 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : போக்கிரி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

vijayதனி ஆளாக நின்று தன் எதிரிகளைப் போட்டுத்தள்ளுவதில் வல்லவரான விஜய்யின் வீரதீர பிரதாபங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஊரின் பிரபல தாதாவான வின்சென்ட் அசோகன் விஜயைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவர்களது எதிர் கும்பலான ஆனந்தராஜ் ஆட்கள் விஜய்யுடன் மோத - அடுக்கடுக்காய் அவர்களைத் தீர்த்துக்கட்டுகிறார். ஒரு கட்டத்தில் வின்சென்ட் கொல்லப்பட - அவரது பாஸான பிரகாஷ்ராஜ் இந்தியா வருகிறார். வந்தவர் அதே வேகத்தில் ஆனந்த்ராஜை கொன்று மத்திய மந்திரியையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். இதை அறிந்து உஷாராகும் போலீஸ் கமிஷ்னர் நெப்போலியன் பிரகாஷ்ராஜை தந்திரமாகக் கைது செய்கிறார். தங்கள் தலைவனை விடுவிக்க நெப்போலியன் மகளைக் கடத்துகிறது பிரகாஷ்ராஜ் கும்பல். தன் மகளுக்காக பிரகாஷ்ராஜை விட்டுவிடுகிறார் நெப்போலியன். உங்களை எல்லாம் ஒழிக்காமல் விடமாட்டார் எங்க அப்பா என்று கதறும் நெப்போலியன் மகள் பிரகாஷ்ராஜின் ஆட்களில் ஒருவர் நெப்போலியன் அனுப்பியவர் என்று சொல்ல - பதற்றம் பற்றிக்கொள்கிறது பிரகாஷ்ராஜிடம். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக என்றுமே வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்று முழங்கும் விஜய் நெப்போலியனின் மகளை தங்கள் ஆட்கள் கடத்திக்கொண்டு வந்ததை கடுமையாக எதிர்க்கிறார். நெப்போலியன் மகள்
கதி என்ன ஆனது? பிரகாஷ்ராஜ் கும்பலில் போலீஸ¤க்காக உளவு பார்ப்பவர் யார்?  கிளைமாக்ஸ் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது.

பரட்டை தலையும் சட்டை மேல் சட்டையுமாக சரியான போக்கிரியாக விஜய். காசுக்காக இத்தனை கொலைகளை யாராவது செய்வார்களா என்று அதிர வைக்கும் அளவிற்கு - ஏதோ வெங்காயம் வெட்டுவதைப் போல ஆட்களை வெட்டிச்சாய்க்கிறார். விஜய் படங்களில் வழக்கமாக இருக்கும் நகைச்சுவை இந்தப்படத்தில் மிஸ்ஸிங். அஸினுடன் வரும் காட்சிகளிலும் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கிறார். பாடல்காட்சிகளில் வழக்கம் போல அசத்தும் விஜய்.

Vijay, Asinதன்னை முதலில் துரத்தி துரத்தி காதலிக்கும் விஜய் பிறகு ஏன் தன்னை விட்டு விலகிப் போகிறார் என்பது புரியாமல் குழம்பித்தவிக்கும் காட்சியிலும் விஜய்யிடம் தன் காதலைச் சொல்ல வரும் இடத்தில் அவர் தன் எதிரிகளை சரமாரியாக கொன்று குவிப்பதைப் பார்த்து மிரளும் காட்சியிலும் அசினின் நடிப்பு ஓக்கே. மற்றபடி வழக்கமான கதாநாயகிகள் செய்யும் வேலையை (ஹீரோவுடன் 4 பாட்டுக்கு டூயட் ஆடுவது) மட்டுமே செய்கிறார்.

படத்திற்குப்படம் நடிப்பில் வித்தியாசம் காட்டும் ஒரு ஆள் பிரகாஷ்ராஜ். கைதாகி சிறையிலிருக்கும் போது நெப்போலியன் பிரகாஷ்ராஜை தூங்கவிடாமல் தண்டனை கொடுப்பதும் அடியிலிருந்து தப்பிக்க பிரகாஷ்ராஜ் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு சமாளிக்கும் காட்சிகளிலும் காமெடி வில்லனாக கலகலப்பூட்டுகிறார்.

குங்பூ மாஸ்டராக வரும் வடிவேலு பல காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் குரங்கு பொம்மை கேட்பது, சூர்யா போல "சுட்டும் விழிச் சுடரே" பாடலுக்கு அசினுடன் கனவு காண்பது என சில காட்சிகளில் மட்டுமே ஜொலிக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும்படியான பாத்திரம் நாசருடையது. மேலும் படத்தில் ஸ்ரீமன், வையாபுரி போன்றவர்களும் உள்ளார்கள்.

மணிசர்மா இசையில் பாடல்கள் ஓக்கே. வி. பிரபாகரனின் வசனம் ஆங்காங்கே பளிச்சிடுகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் பெப்சி விஜயனின் ஸ்டண்ட் படத்திற்கு பெரிய பலம். என்னதான் சினிமா என்றாலும் சீனுக்கு சீன் சண்டைகள், கொலைகள் என்று வன்முறை தாண்டவமாடுவது ரொம்ப ஓவர். ஒரு டஜன் அடியாட்களை துவம்சம் செய்துவிட்டு விஜய்,சின்ன காயமின்றி வருவதெல்லாம் த்ரீமச் ரகம்... மேலும் உள்ளூர் இன்ஸ்பெக்டரின் வில்லத்தனங்களும் அதை விஜய் எதிர்கொள்ளும் விதமும் பார்த்து பார்த்து அலுத்துப்போன சமாச்சாரங்கள். வன்முறையைக் குறைத்து கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இயக்குனர் பிரபுதேவா போக்கிரி மூலம் ரொம்பவே ஜொலித்திருப்பார்.

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |