பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : நேசிக்கிறேன்
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
| Printable version | URL |

 

"ஸ்நேகிதனே!
உனக்கும்
எனக்கும்
ஏதோ ஓர் ஸ்னேகம்
தென்றலின் ஸ்பரிசம் போல்
மழலையின் தீண்டல் போல்

cupidஅழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
ஒருவரை ஒருவர்
காதலிப்பதும்
ஒருவரால் ஒருவர்
காதலிக்கப்படுவதும்
ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்

நீ என்னைக்
காதலுடன்
தேடி வந்த வேளைகளில்
நாடிச் செல்ல மனமில்லாமல்
ஓடி ஒளிந்தேன் - பின்பு
எனக்குள் வாடி வதங்குவதையே
வழக்கமாக்கிக் கொண்டேன்

காதலர்தினத்தில் காத்திருக்கிறேன்
விழிகளால் பேசிக் கொண்ட
சாடைகளுக்கு விடுப்பு விட்டு,
தெவிட்டாத செந்தமிழில்
தெள்ளமுதக் காதலை வார்த்தைகளில்
பரிமாறிக் கொள்ள"

| | |
oooOooo
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |