பிப்ரவரி 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : தனியுலகு
- மு. பழனியப்பன் [muppalam2003@yahoo.co.in]
| Printable version | URL |

குழந்தையின் உலகம்
வேறுவிதமாய் இருக்கிறது
 
வீட்டு வாசல்
சாலையின் ஒரு பகுதி
 
வாசல் விட்டு
சாலையில் இறங்கித்
திடு திடுவென ஓடிவரும்
அம்மனக் குழந்தை
 
கால்கள் தரையில் பாவாமல்
தாண்டிக் குதித்தோடும் நடையழகு
 
வாசல் வந்து சாலை இயக்கத்தைக்
கண்டு கொள்ளாமல்
தன் பாட்டுக்குப் போகும்
 
நிறுத்த முடியாமல்
இரு சக்கர வாகனத்தை
தடால் என நிறுத்தி
 
கால் ஊன்றி
வாகனத்தை நிறுத்த முற்பட
வழுக்கி விழும்
பின் இருக்கை மனைவி
 
கீழ்விழுந்து
எழ முயல
 
குழந்தை
நிற்காமல் ஓடுகிறது

திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறது
எங்களின் வீழ்ச்சியைப் பார்க்காமல்
செல்லுகிறதே என்ற எமது எதிர்பார்ப்பு
 
குழந்தையின் உலகம்
வேறுவிதமாய் இருக்கிறது
 
சரிந்த மனைவி
தன் பிள்ளையை
நினைக்கிறாள்
 
நான்
ஊரார் பிள்ளை நடையழகை
அதன் உலகை
எண்ணி வியக்கிறேன்.

oooOooo
மு. பழனியப்பன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |