Tamiloviam
பிப்ரவரி 21 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : மலரட்டும் மக்களாட்சி
- மீனா [feedback@tamiloviam.com]
|   | Printable version | URL |

ஒருவழியாக தேர்தல் முடிந்து பாகிஸ்தானில், கூட்டணி அரசு அமைவது உறுதியாகி விட்டது. பார்லிமென்ட் தேர்தலில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 258 தொகுதிகளில் 85 இடங்களைப் பிடித்து பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு 67 இடங்கள் கிடைத்துள்ளன. நவாஸ¤ம் பனாசிரின் கணவர் சர்தாரியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று பலரும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தாலும் அது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

அமெரிக்காவின் தலையீட்டால் முஷாரப்புடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை காரணமாகத்தான் ஊழல் வழக்குகளிலிருந்து தற்காலிக விலக்கு பெற்றுதான் பெனாசிர் பாக்கிஸ்தான் திரும்பினார். தங்களுக்கு மிகவும் நம்பிக்கையான முஷாரப்புடன் இணைந்து ஆட்சி செய்யவேண்டும் என்று கூறித்தான் பெனாசிரை அமெரிக்கா திரும்ப அழைத்துவந்தது. பெனாசிரின் படுகொலைக்குப் பிறகு சர்தாரியிடம் பெனாசிரிடம் எதிர்பார்த்ததைத் தான் - முஷாரப்புடன் இணைந்து பணியாற்றுவதைத்தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது - இதை சர்தாரி ஏற்க மறுத்தால் அவர் மீதான வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்கும் என்பதை மறைமுகமாக அவருக்கு உணர்தியுள்ளார் முஷாரப்.

முஷாரப்புடனான கூட்டுவைக்காவிட்டால் கதை கந்தலாகும் என்ற நிலையில் சர்தாரி பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் நவாஸோ அதிபர் முஷாரப்பால் நீக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் வேலியில் திரும்ப சேர்க்கவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக உள்ளார். ஆனால் மீண்டும் பணிக்கு வந்தால் ஊழல் வழக்குகளில் எங்கே தனக்கு எதிரான தீர்ப்பை இந்த நீதிபதிகள் தந்துவிடுவார்களோ என்ற பயத்தில் இந்த விஷயத்தில் நவாஸ¤க்கு ஒரு பதிலையும் சொல்லாமல் காலம் கடத்தினாலும் கடைசியில் நவாஸ¤ம் சர்தாரியும் இணைந்து ஆட்சி அமைப்பார்கள் என்று செய்திகள் வரத் துவங்கியுள்ளன. பிரதமராக நவாஸ் வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மொத்தத்தில் ராணுவ ஆட்சி ஒழிந்து பாக்கில் முறையான மக்களாட்சி நடைபெறுமானால் நமக்கெல்லாம் சந்தோஷமே. ஆண்டாண்டு காலமாக இருநாடுகளுக்கிடையே நிலவிவந்த மோதல் போக்கு மறைந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்றும் இருநாட்டுகளுக்குமிடையே உள்ள பகைமை உணர்வு மாறவேண்டும் என்றும்தான் இரு நாட்டு மக்களும் எதிர்பாக்கிறார்கள். காஷ்மீருக்காக பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும் - இனி சமாதானமாக வாழ்வோம் என்ற உணர்வு பாக்.மக்களிடம் மிக அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை ஆட்சியாளர்கள் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |