|
இந்தியாவில் முதன் முதலில் அச்சிடப்பட்ட நூல் 'தம்பிரான் வணக்கம்'.
போர்ச்சுகீசிய மொழியில் புனித பிரான்சிஸ் சேவியர் (கி.பி.1506..1552) எழுதிய 'டாக்ட்ரினா கிறிஸ்டம்' என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு இந்நூல். ஹென்றி ஹென்றி குவில் (கி.பி. 1520..1600) என்பவரால் (நம் நாட்டு மக்களால் அவர் அன்றிக்கி பாதிரியார் என்று அழைக்கப்பட்டார்). இது மொழி பெய ர்க்கப்ப ட்டு, கேரள மாநிலம் கொல்லத்தில் அச்சிடப்பட்டு, 1578 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இந்நூலின் ஒரு பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. (2007 ஜனவரியில் திருச்சிராப்பள்ளி நகரில் நிகழ்ந்த தொல்லெழுத்துப் பயிலரங்கப் பயிற்சியாளர்களுக்காக 27.01.2007ல் மறுபதிப்பாக இதை திருச்சி, காட்டூர், பாரதி ஆய்வு நூலகம் வெளியிட்டு உதவியுள்ளது.)
|