பிப்ரவரி 24 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
திடுக் ரிபோர்ட்
அமெரிக்க மேட்டர்ஸ்
முத்தொள்ளாயிரம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கட்டுரை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : கூட்டணிக் கொள்கை
    - மீனா
    | Printable version |

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் இளங்கோவன் அறிக்கையால் மத்திய கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கும் வகையில் தி.மு.க தலைவர் மற்றும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். மேலும் இளங்கோவனின் பேச்சைக் கண்டிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் உள்ள தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்ற ரீதியில் அறிக்கைகளாகவும், கவிதைகளாகவும் எழுதித் தள்ளியிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. தி.மு.கவின் அவசரக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பில் கூட்டணி கட்சிகள் காத்திருக்கின்றன.

    போதாத குறைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கருணாநிதியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.. காங்கிரஸ் தலைவி சோனியா, தன் கட்சி ஆட்கள் இனி இப்படி பேசமாட்டார்கள் என்ற ரீதியில் கருணாநிதியிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

    மத்தியில் கூட்டணி ஆட்சியில் போட்டி போட்டுக்கொண்டு பங்கெடுத்த தி.மு.க தலைமையால் மாநிலத்தில் கூட்டணி என்ற வார்த்தையைக் கூட ஜீரணிக்க முடியாமல் போனதை என்னவென்று சொல்வது?  நாளை கூட்டணி ஆட்சி என்ற பேச்சை மற்ற கட்சிகளைச் சேர்ந்த எந்த ஒரு தலைவரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே தி.மு.க தலைமை இந்தப் பிரச்சனையை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறது. ராஜினாமா அஸ்திரத்தை தி.மு.க தலைவர் தமிழக மக்களுக்காக காவிரியை பெற ஏவவில்லை.. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ஏவவில்லை... மக்கள் நலன் சம்மந்தப்பட்ட எந்த காரியத்திற்காகவும் ஏவவில்லை... எங்கே தமிழகத்தில் தங்களுக்குப் போட்டியாக வேறு கூட்டணி கட்சிக்காரர்கள் யாராவது வந்துவிடப்போகிறார்களோ என்ற ஒரே காரணத்திற்காக ஏவியிருக்கிறார்.

    தி.மு.க கட்சியையே தன் குடும்பச் சொத்தாக நினைப்பவரிடமிருந்து இந்த விஷயத்தில் வேறு விதமான பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் கருணாநிதியின் இத்தகைய நடவடிக்கை கூட்டணி கட்சியின் மற்ற தலைவர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு மக்கள் எவ்விதம் பதிலளிக்கப்போகிறார்கள்? வரும் தேர்தலில் இதற்கான விடை கிடைக்கும் என்று நம்புவோம்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |