பிப்ரவரி 24 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
திடுக் ரிபோர்ட்
அமெரிக்க மேட்டர்ஸ்
முத்தொள்ளாயிரம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கட்டுரை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கட்டுரை : தமிழ் பதிப்பக வரலாற்றில் மறுமலர்ச்சி
    - அருளடியான்
    | Printable version |

    நீண்ட காலமாக தமிழில் வெற்றிகரமாக நூல்களை வெளியிட்டு வருபவர்கள் வானதி பதிப்பகம். எழுத்தாளர் கல்கியின் மிகப் பெரிய வரலாற்று நாவல்களை வெளியிட்டு வரும் இப்பதிப்பகம் பதிப்பக வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. மறைந்த தன்முன்னேற்ற எழுத்தாளர் அப்துர் ரஹிம் தான் எழுதிய தன்முன்னேற்ற நூல்களை, சொந்தமாக 'யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்' என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி வெளியிட்டார். தமிழ் நூல்கள் விற்பனையில் சாதனை படைத்த நூல்களில் இவரது நூல்களுக்கு என்றும் இடம் உண்டு. இப்பதிப்பகத்தை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மணிமேகலைப் பிரசுரம் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களையும், தன்முன்னேற்ற நூல்களையும்
    வெளியிட்டு வருகிறது. பாரதி பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், திருமகள் நிலையம் போன்ற பதிப்பகங்கள் நீண்ட காலமாக தமிழில், பிரபலமான அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும் எழுதிய நூல்களை பதிப்பித்து வருகின்றன.

    நிறப்பிரிகை இலக்கியப் பத்திரிக்கை தமிழில் அரசியல், இலக்கிய விவாதங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. நிறப்பிரிகையில் இருந்த அ. மார்க்க்ஸ் போன்றவர்களின் கட்டுரைகளை, கோவை 'விடியல் பதிப்பகம்' வெளியிட்டது. பின்னர், அடையாளம் பதிப்பகம் அ. மார்க்ஸின் கட்டுரைகளை நூலாக வெளியிட்டது.

    காலச்சுவடு பதிப்பகம் புதுமைப் பித்தன் பதிப்புகளுக்கு செம்பதிப்பு கொண்டு வந்தது. தான் வெளியிடும் நூல்களை வெளி நாட்டு தமிழர்களிடம் விற்பனை செய்வதில் பிற பதிப்பகங்களுக்கு வழிகாட்டியது காலச்சுவடு பதிப்பகமே. இதே வழியில் கிழக்கு பதிப்பகம் தமிழ் நூல்களை இணையம் மூலமாக விற்க 'காமதேனு' என்ற இணைய அங்காடியை நடத்துகிறது. எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதி இப்பதிப்பகம் வெளியிட்ட 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' என்ற நூல் ஓராண்டுக்குள் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர்
    மனுஷ்யபுத்திரன் 'உயிர்மை பதிப்பகம்' மூலம் தன் நூல்களையும், எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோரது நூல்களையும் வெளியிட்டு வருகிறார். எழுத்தாளர் ஞா நி, தான் எழுதிய நூல்களை ஞானபானு பதிப்பகம் மூலமாக வெளியிட்டு வருகிறார்.

    பத்தாண்டுகளுக்கு முன் பதிப்புத் துறையில் நுழைந்த விகடன் குழுமம் பல நூல்களை வண்ணபடங்களுடன் விலை மலிவாய் வெளியிட்டு வருகிறது. இப்போது குமுதம் நிறுவனமும் பதிப்புத் துறையில் நுழைந்துள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களும் தங்கள் குழும இதழ்களில் தொடராக வந்த கதைகளையும், கட்டுரைகளையுமே நூலாக வெளியிட்டுள்ளன.

    கேரளாவுடன் ஒப்பிடும் போது தமிழர்களிடம் படிக்கும் பழக்கம் குறைவு. தொலைக்காட்சி, இணையம் என நம் நேரத்தைப் பங்கிட பிற ஊடகங்களும் உள்ளன. இந்நிலையில் தமிழ் பதிப்பகங்கள் வணிக ரீதியாக வெற்றிகரமாக நடப்பதை நினைக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |