மார்ச் 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : இதயத்திருடன்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

வழக்கமான காதல் கதையை கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சரண். முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி உள்ளது கதை மற்றும் திரைக்கதை.

Jeyam Ravi, Kamnaமாநில உள்துறை செயலரான வாணிவிஸ்வநாத்தின் ஒரே மகள் காம்னா. அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட் என்பதால் அம்மாவை வெறுப்பேற்றும் விதமாக பல வேலைகளைச் செய்பவர் காம்னா. ஒரு கட்டத்தில் அம்மாவை வெறுப்பேற்ற தன் தோழியை விட்டு தன்னை செக்ஸியாக படம் எடுத்து மெயில் அனுப்புகிறார். போதாத குறைக்கு அதை அனுப்பியவர் முகவரியில் டி.மகேஷ் - காட்டெரிங் காலேஜ் என்றெல்லாம் விபரங்களை வேறு அனுப்பி வைக்கிறார். அந்தப் படங்களைப் பார்த்து கொதித்துப் போகும் வாணி போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜை
இந்த விஷயமாக துப்பறியச் சொல்கிறார்.

காம்னாவின் போதாத நேரம் - அதே பேரில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஜெயம் ரவி. பிரகாஷ்ராஜ் எதற்காக தன்னை மிரட்டுகிறார், யாருக்கு தான் மெயில் அனுப்பியது என்று குழம்பித் தவிக்கும் ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் தன்னை தேவையில்லாமல் வசமாக மாட்டிவிட்டவர் காம்னா என்பதை தெரிந்து கொள்கிறார். வழக்கமான காதல் கதையில் வருவதைப் போல காம்னாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். ரவியின் இந்தக் காதலை ஒப்புக்கொள்ள காம்னா மறுக்க, இருவருக்கும் இடையே மோதல் வலுக்கிறது. "நீயே வந்து என்னைக் காதலிப்பதை ஒத்துக்கொள்வாய்.." என்று ரவி சவால் விட, "அப்படி ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.." என்று எதிர்சவால் விடுகிறார் காம்னா.

ரவியை வெறுப்பேற்றுவதற்காக போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜை தான் காதலிப்பதாக காம்னா டூப் விட, அதை அப்படியே நம்பிவிடும் பிரகாஷ்ராஜ் காம்னாவின் அம்மா வாணியிடம் இந்த விஷயத்தைச் சொல்லி தன் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிவிடுகிறார். தன் காதலில் முழு நம்பிக்கை வைக்கும் ரவி நிச்சயம் காம்னா - பிரகாஷ்ராஜ் கல்யாணம் நடக்காது என்று சவால் விடுகிறார். போதாத குறைக்கு தானே மாப்பிள்ளைத் தோழனாக வர சம்மதிக்கிறார். கடைசியில் காம்னா - பிரகாஷ்ராஜ் கல்யாணம் நடந்ததா இல்லை ரவி - காம்னா காதல் ஜெயித்ததா என்பதே முடிவு.

ஜெயம் ரவி - இந்தப் படத்திலும் ஆடுகிறார், பாடுகிறார், காமெடி செய்கிறார், காதலிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், நிறைய சண்டை போடுகிறார். மற்றபடி புதிதாக ஒன்றுமே செய்யவில்லை. அட்லீஸ்ட் அடுத்த படத்திலாவது நடிப்பில் ஏதாவது புதிய முயற்சிகளை செய்ய ஆரம்பிக்காவிட்டால் பத்தோடு பதினொன்று ஆகிவிடுவார்.

கவர்சிப் புயலாக வருகிறார் காம்னா. கொஞ்சூண்டு நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். அம்மாவை வெறுப்பேற்றுவதாக சொல்லிக்கொண்டு அவர் செய்யும் சில விஷயங்கள் நம்மை வெறுப்பேற்றுகின்றன.

முதல் பாதியில் நல்லவனாகவும் அடுத்த பாதியில் கிட்டத்தட்ட வில்லனாகவும் வரும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போலவே இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் காம்னா தன்னைக் காதலிப்பதாக ஜெயம் ரவி கூறிய நிமிடத்திலிருந்து காம்னாவைப் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் வழிவது சூப்பர்.

கண்டிப்பான அம்மாவாக வாணி விஸ்வநாத். கம்பீரமான நடிப்பால் அசத்துகிறார். மேலும் படத்தில் ஞானசம்மந்தன், கல்பனா மற்றும் நாசரும் இருக்கிறார்கள். லொள்ளு சந்தானத்தின் காமெடி பல இடங்களில் சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக எரிச்சலை ஏற்படுத்துகிறது. முக்கியமாக அந்த பாத்ரூம் சீன்.

சண்டைக் காட்சிகளை திறமையாக அமைத்துள்ள விக்ரம் தர்மாவிற்கு பாராட்டுகள். இசை பரத்வாஜ் - ஓக்கே ரகம் தான். நல்ல பல படங்களை வழங்கிய சரணுக்கு என்ன ஆனது என்று நம்மை யோசிக்க வைக்கும் அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். கடைசி வரை நீடிக்கும் காம்னா - ரவியின் பிடிவாதத்தை தவிர கதையில் புதிதாக ஒன்றுமே இல்லை. இது போன்ற படங்களை இயக்குவதற்கு முன்பாக - இந்த மாதிரி படங்களில் நடிப்பதற்கு முன்பாக சரண், ஜெயம்ரவி போன்றவர்கள் கொஞ்சமாவது கதை திரைக்கதையைப் பற்றிச் சிந்தித்தால் தேவலை.

| | | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |