மார்ச் 03 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
கட்டுரை
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
கவிதை
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : தேவை நல்ல தலைவர்கள்
    - மீனா
    | Printable version |

    பீகாரில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்?  ஜார்கண்ட் சிபுசோரன் தலைமையிலான அரசு தொடருமா? அல்லது கவிழுமா? என்று ஏற்கனவே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவும் இவ்வேளையில் கோவாவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரியானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் பஜன்லாலை முதல் மந்திரியாக்காததை எதிர்த்து முதலில் ஆர்பாட்டம் செய்த அவர் தற்போது சமாதானத்திற்கு திரும்பியிருக்கிறார். இந்த சமாதானம் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்பது கேள்விக்குறிதான்.

    முன்பெல்லாம் மாநில அரசானாலும் சரி மத்திய அரசானாலும் சரி - ஒரு நிலையான ஸ்திரமான ஆட்சியைக் கொடுக்க நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அதனாலேயே தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தன. மேலும் ஆட்சிக்கலைப்பு போன்ற அவலங்களும் நடைபெறாமல் இருந்தன. ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்களின் ஒட்டுமொத்த சுயநலப் போக்காலேயே தேர்தல்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அவ்வாறு தேர்தல் நடந்தாலும் யாருக்கும் அருதிப் பெறும்பான்மை கிடைக்காமல் போகிறது - கூட்டணி ஆட்சிக்கும் நமது தலைவர்கள் ஒத்துவருவதில்லை.

    வன்முறை, அடாவடித்தனம் போன்றவற்றால் ஆட்சிப்பீடம் ஏறும் தலைவர்கள் தங்கள் நாற்காலியை தக்க வைத்துக்கொள்ளத்தான் ஒவ்வொரு நாளும் பிரம்மப்பிரயத்தனம் செய்கிறார்களே தவிர மக்கள் நலனைப் பற்றி கொஞ்சமும் சிந்திபதில்லை. விளைவு மக்கள் அவர்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆக இது ஒரு தொடர் நிகழ்வாகத் தொடர்கிறது. உடனே இடைத் தேர்தல் நடத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் வீணாகத் தேர்தல் என்ற பெயரில் சுயநல அரசியல்வாதிகளின் விளையாட்டால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

    இதற்கெல்லாம் ஒரே முடிவு - அரசியலை வியாபாரமாக்குவதை இன்றைய அரசியல் தலைவர்கள் கொஞ்சமாவது குறைத்துக் கொண்டு தங்கள் ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய முன்வரவேண்டும். அப்போதுதான் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் - நிலையான ஆட்சி வழங்குதல் போன்ற வாசகங்கள் உண்மையில் நிஜமாகும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |