Tamiloviam
மார்ச் 15 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பொறி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Jeeva, Poojaநேர்மையான ஆசிரியராக இருந்து ஓய்வு பெறும் நாகேஷின் ஒரே மகன் ஜீவா. ஜீவாவிற்கு புத்தக விற்பனை செய்யும் தொழில். மகனுக்காக தன்னுடைய ஓய்வூதியப் பணத்தை எல்லாம் செலவு செய்து ஒரு கடை வைத்துத்தருகிறார் நாகேஷ். சந்தோஷமாக ஜீவா தொழிலைத் தொடங்க நினைக்கும்போதுதான் அந்தக் கடை இன்னொருவருக்குச் சொந்தமானது என்பதும் தன் அப்பா ஏமாற்றப்பட்டதும் ஜீவாவிற்குத் தெரியவருகிறது. சின்ன அளவில் நடந்துவரும் மோசடி இது என்று நினைத்து சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க நினைத்துப் புறப்படும் ஜீவாவிற்கு காத்திருக்கிறது அதிர்சி. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் பெற்ற பெரிய ஆட்கள் என்பது தெரியவந்தும் தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார் ஜீவா. போலி பத்திரங்களைத் தயார் செய்து நடுத்தர குடும்பத்து மக்களை ஏமாற்றும் அந்தக் கும்பலை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்த நினைக்கிறார்.  கத்தி மற்றும் புத்தி இரண்டையும் கொண்டு தன் முயற்சியில் ஜீவா வெற்றி பெற்றாரா? தன்னுடைய கடையை மீட்டாரா என்பதே கிளைமாக்ஸ். இதற்கிடையே ஜீவா - பூஜா காதல் வேறு.. மோதலில் ஆரம்பித்து காதலில் விழுகிறார்கள் இருவரும்.

ஜீவா தன் யதார்த்தமான நடிப்பால் ஓரளவு அசத்தினாலும் கதை தேர்வு செய்வதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் அசத்துகிறார். காமெடி காட்சிகள் சரளமாக வருகின்றன இவருக்கு. வில்லன் முதலில் கான்பரன்ஸ் கால் போட  பிறகு ஜீவா அதே ஸ்டைலில் கான்பரன்ஸ் கால் போட்டு அவரை கலவரப்படுத்துவது அருமை.

வழக்கமான தமிழ்பட நாயகி என்ன செய்வாரோ அதையே செய்கிறார் டி.வி. தொகுப்பாளராக வரும் பூஜா. நான்கு காட்சிகளில் தலையைக் காட்டி இரண்டு டூயட் பாடிவிட்டு காணாமல் போகிறார்.

இயக்குனர் சீமான் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்தாலும் தன் யதார்த்த நடிப்பால் மனதில் நிற்கிறார். சிசர் மனோகர், மகாநதி ஷங்கர் என்று ஏகப்பட்ட வில்லன்கள். காதல் தண்டபாணி நேர்மையான - நல்ல அரசியல்வாதியாக வந்து ஆச்சரியமூட்டுகிறார். நாகேஷின் உருக்கமான யதார்த்த நடிப்பு அற்புதம். டெல்லி கணேஷ் தன் பங்கிற்கு பல காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். கருணாஸின் காமெடி ஓக்கே ரகம்.

Pooja,Jeeva தினாவின் இசை திருடா திருடியை நினைவூட்டுகிறது. ஆனாலும் பேருந்தில் நீ பாடல் அருமை. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் கணல் கண்ணனின் சண்டைக்காட்சிகளும் படத்திற்கு பெரிய பலம்.

படத்தின் பல இடங்களிலும் பாடல் காட்சிகளிலும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா தன்னுடைய முந்தைய படமான திருடா திருடியை நினைவூட்டுவதை தவிர்த்திருக்கலாம். திரைக்கதையும் கிட்டத்தட்ட ஈ மற்றும் திருடா திருடி படங்களின் கலவையாகவே தோன்றுகிறது. ரியல் எஸ்டேட் மோசடி என்ற அற்புதமான கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல திரைக்கதையாகச் செதுக்கியிருந்தால் இயக்குனர் எங்கோ போயிருப்பார்.

| | | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |