மார்ச் 17 2005
தராசு
கார்ட்டூன்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
திரைவிமர்சனம்
வ..வ..வம்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    ஆன்மீகக் கதைகள் : அவரவர் தராதரம்
    -
    | Printable version |

    ஒரு மன்னன், அவனுடைய அமைச்சர் மற்றும் சில வீரர்கள் காட்டுக்கு வேட்டையாடப் போனார்கள். ஒரு கட்டத்தில், மூவரும் வழி தவறித் தனித்துப் பிரிந்தனர். வழி தேடி அலைந்தனர்.

    ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். பார்வையற்றவர்.

    முதலில், ஒரு வீரன் அவரிடம் வந்தான். பார்வையற்றவர் என்பதைப் புரிந்து கொண்டான். உடனே குதிரைமீது அமர்ந்தவாறே, "ஏய் குருடா ! இந்தப் பக்கம் மனிதர் யாரும் வந்த காலடியோசை கேட்டதா ?" என்றான்.

    முனிவர் அதற்கு "இல்லையே வீரனே!" என்றார். அவன் போய்விட்டான்.

    அடுத்ததாக, அமைச்சர் வந்தார். குதிரையை விட்டுக் கீழிறங்கி நின்று, "கண் பார்வையற்ற முனிவரே ! இந்தப் பக்கம் மனிதக் காலடியோசை ஏதும் கேட்டதா ?" என்றார்.

    அதற்கு முனிவர் "யார் ? அமைச்சரா ? சற்று முன்பு வீரன் ஒருவன்தான் வந்தான்" என்றார். அமைச்சர் போய் விட்டார்.

    சற்று நேரத்தில் அரசன் வந்தான். அவன் குதிரையை விட்டு இறங்கி, முனிவர் முன்பு மண்டியிட்டு "மகரிஷி அவர்களே ! தயவு செய்து இங்கு மனிதக் காலடியோசை ஏதும் கேட்டதா

    என்பதைத் தெரிவித்து உதவ வேண்டும்" என்றான்.

    அதற்கு முனிவர் "முதலில் ஒரு வீரனும், பிறகு அமைச்சரும் வந்தனர். இப்போது அரசர் நீங்கள் வந்துள்ளீர்கள், என்றார். அரசன் விடை பெற்றான்.

    சற்று நேரத்தில் மூவரும் ஒரீடத்தில் சந்தித்துக் கொண்டனர். மூவரிடமும் ஆச்சரியம். 'பார்வையற்ற முனிவர் எப்படி ஓவ்வொருவரையும் இனம் கண்டு கொண்டார் ?' முனிவரிடமே வந்து கேட்டனர்.

    முனிவர் சொன்னார் : குதிரை மீடு அமர்ந்தவாறே 'ஏ குடுடா' என்றவன் வீரன்.

    இறங்கி நின்று 'பார்வையர்ற முனிவரே' என்றவர் அமைச்சர்.

    மண்டியிட்டு 'மகரிஷி அவர்களே' என்றவர் அரசர் என்றார்.

    ஒருவர் நடந்துக்கொள்ளும் விதமும், அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் அவரவர்கள் தராதரத்தை காட்டிக் கொடுத்து விடும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |