மார்ச் 17 2005
தராசு
கார்ட்டூன்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
திரைவிமர்சனம்
வ..வ..வம்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கவிதை : தோள்களைத் தட்டு
    - சத்தி சக்திதாசன்
    | Printable version |

     

    உலகம் உனதுதான் தம்பி
    நாளையின் ராஜா நீதான்
    நம்பிக்கை கொடுப்பாய் உன்
    நாட்டு மக்களுக்கு பாவம் அவர்
    நாளாய் படும் துன்பம் நீயறிவாய் !

    தோள்களைத்தட்டு துணிவைத் தொட்டு !

    கண்களில் நீர் ஆறாய்ப் பெருகி
    காய்ந்த கோடு கன்னத்தில் ; தமிழ்க்
    கன்னிப்பெண்கள் தம் வாழ்வைக்
    கனவில் மட்டும் காணும் கொடுமை
    கைகளை உயர்த்தி நீ சீர்தனமெனும்
    காரிருளை அழிப்பாய் ஏனேனில்
    கருணை நெஞ்சிலேந்தும் ஒரு
    கடமை வீரன் நீ மறந்து விடாதே!

    தோள்களைத்தட்டு துணிவைத்தொட்டு !

    சமுதாயத்தூண் நீயெனின் எழுவாய்
    சரித்திரத்தின் எழுத்தாணியாய் மிளிர்வாய்
    சாதி என்றொரு வியாதியை அழிப்பாய்
    சத்தியம் ஒன்றையே மதிப்பாய் , தம்பி
    சங்கற்பம் நீ இன்று பூண்டிடுவாய்
    சரியான வழியிலே நடந்திடுவாய் !

    தோள்களைத்தட்டு துணிவைத்தொட்டு !

    விஞ்ஞானம் முழுவதும் நீ கற்று
    விழிக்க வைப்பாய் சமுதாயம் தன்னை
    விடியாது வாழ்க்கை தமக்கென ஏங்கும்
    வாழ்வற்ற ஏழைகள் வழியை மாற்றும் - வலிமை
    வீரன் உன் நெஞ்சில் உண்டு , இனியும்
    வீணாய்க் காலத்தை விரயம் செய்யாதே !

    தோள்களைத்தட்டு துணிவைத்தொட்டு !

    இல்லை என்றொரு இல்லை என ஆக்கி
    இனியும் கல்வியறிவற்ற சமுதாயம் வேண்டம் என
    இருக்கும் ஊரெல்லாம் கல்விச்சாலைகள்
    இருக்கு என்றொரு பெருமையை ஏற்று
    இன்றைய அறிவான சமுதாயம் எமது
    இளஞ்சமுதாயம் என சங்கெடுத்து முழங்கு

    தோள்களைத்தட்டு துணிவைத்தொட்டு

    தாமதம் செய்யாதே தம்பி உலகம்
    தவறாமல் உருண்டிடும் மறவாதே
    தமிழெனும் மொழி பேசும் மாந்தர்
    தரணியிலே அறிவால் உயர்ந்தவர்
    தப்பாமல் இப்புகழ் பாடிடும் ஓர் நிலை
    தருவாய் நீ உன் தழன்னைக்கே

    தோள்களைத்தட்டு துணிவைத்தொட்டு

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |