|
காதலிக்கும் நாயகன் - நாயகி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாயகியின் அண்ணன் நாயகனை கொல்ல முயற்சி செய்கிறான் - வழக்கமாக தமிழ் சினிமா காதல் கதையைப் போலத்தான் இந்தப் படமும் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு படம் செல்லும் திசைதான் சூப்பர். காதல் - கத்திகபடா - குத்துப்பாட்டு என்று ஒரே பார்முலாவின் சென்று கொண்டிருக்கும் தமிழ் திரையுலகத்தை அப்படியே 180 திசை திருப்ப முயன்றிருக்கிறார் இயக்குனர்.
நாயகன் அஜய் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். யாருமற்ற அனாதையான அவர், ஸ்ரீஜியைக் காதலிக்கிறார். நாயகியின் சகோதரர் ரக்சய், ஒரு தீவிரவாதி. சென்னையில் குண்டு வைத்து பெரும் நாசம் ஏற்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் அஜயும், ஸ்ரீஜியும் வீட்டை விட்டு ஓட நினைக்கும்போது ரக்சயிடம் சிக்குகிறார்கள். தங்கையை ஒரு மறைவிடத்தில் மறைத்துவிட்டு அஜயின் கால் ஷீவில் வெடிகுண்டை வைத்துவிடுகிறார் ரக்சய். அவர் கூறும் கண்டிஷன் என்னவென்றால் அஜய் நிற்காமல் ஓட வேண்டும். "ஓடிக்கொண்டேயிரு. எப்போது நிற்கிறாயோ அப்போது நீயும் டமால், உன்னை சுற்றியிருக்கிற பகுதியும் டமால்.." என்று கூறிவிட்டு ஓட விடுகிறார். (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!).
அஜய் ஓட ஆரம்பிக்க - இந்த வெடிகுண்டு மேட்டர் போலீஸ¤க்குத் தெரிய வருகிறது. உதவி கமிஷனர் ரியாஸ் கானும், வெடிகுண்டு நிபுணர் அனு¡சனும் அஜ்யையும் சென்னையையும் காப்பாற்ற விரைந்து வருகிறார்கள். குண்டு அகற்றப்பட்டதா, அஜயும், சென்னையும் தப்பினார்களா? இவர்கள் காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதக் கதை.
ஸ்பீட் போன்ற ¡லிவுட் திரில்லர் படத்ைதப் பார்ப்பது போல அசத்தலாக அமைந்துள்ளது அக்கு. பாடல்கள் - காமெடிக் காட்சிகள் - சண்டைக்காட்சிகள் - செண்டிமெண்டுகள் என்று எதுவுமே இல்லாமல் 90 நிமிடத்தில் அற்புதமாக நச்சென்று ஒரு படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் மாமணிக்கு பாராட்டுகள். ஒருவன் காலையிலிருந்து இரவு வரை ஓடிக் கொண்டேயிருக்க முடியுமா என்ற கேள்விக்கு லாஜிக் மீறாமல் பொருத்தமான காரணங்களை சொல்லியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்திற்கு எடுத்துக்காட்டு.
புதுமுகமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார் அஜய். சாகிற நிமிஷம் வரைக்கும் வாழ்வதற்காக போராடனும் என்று அவர் சொல்வதன் உண்மையான அர்தத்தை அவரே ஓடி ஓடி பிரதிபலிப்பது அருமை. பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை என்றாலிம் பேசும் ஓரிரு டயலாக்குகளிலேயே தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.
நாயகி ஸ்ரீஜி பாந்தமாக வருகிறார். நடிப்பதற்காக வாய்புகள் ரொம்ப குறைவு என்றாலும் கிடைத்த சந்தர்பத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
வில்லனாக வரும் புதுமுகம் ரக்சை அசத்துகிறார். வழக்கமான வில்லன்களைப் போல காட்டுக்கத்தல் கத்தாமல் - கமுக்கமாக காரியத்தை முடிக்கும் அவரது சாதுர்யம் அட போட வைக்கிறது. போலீஸ் எப்படியும் அஜ்யைக் காப்பாற்றிவிடும் என்று தெரிந்து கூடுதலாக ஒரு கூட்டத்தை அவர் அனுப்புவது ஓக்கே ரகம் என்றாலும் பல இடங்களில் போலீஸை அழவைக்கும் அவரது புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.
சிட்டிபாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சாதாரண கதையை தனது அசாதாராண திரைக்கதையால் விறுவிறுப்பாக்கி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்ற நினைத்திருக்கும் மாமணிக்கு பாராட்டுகள்.
|