மார்ச் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சுதேசி
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Vijayakanthஅரசியலில் புகுந்து ஒவ்வொரு ஊராகப் போய் பிரச்சாரம் செய்து வரும் கேப்டன் சினிமாவிலும் பிரசாரம் செய்ய நினைத்து எடுத்திருக்கும் சொந்தப் படம் தான் சுதேசி. படத்தில் ஏகப்பட்ட நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கும் கேப்டன் நிஜத்தில் என்னென்ன செய்வார் என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.

நாட்டில் தன் கண்முன் நடக்கும் ஒவ்வொரு அநியாயங்களையும் தட்டிக்கேட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் வாங்கிக் கொடுப்பவர் விஜயகாந்த். ஒரு முறை பிக்பாகெட் ஆளிடம் தன் கைப்பையைத் தொலைத்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போய் தன் தாயை இழந்து பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார் விஜயகாந்த். அந்த கைப்பையில் இந்நாள் முதல்வர் ஷாயாஜி ஷிண்டே முன்னாள் முதல்வரைக் கொலை செய்வதை காட்டும் சி.டி ஒன்று உள்ளது.  சி.டியைக் கைப்பற்ற நினைக்கும் வில்லன் கோஷ்டி விஜயகாந்தை கண்டுபிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிபுணராண மனோஜ்.கே.ஜெயனிடம் ஒப்படைக்கிறார்கள். ஏகப்பட்ட தேடுதல்களுக்குப் பிறகு ஒரு வழியாக விஜயகாந்தை கண்டுபிடிக்கும் மனோஜ்.கே.ஜெயன் விஜயகாந்த் மூலமாக முதல்வர் பற்றிய உண்மைகளை அறிந்துகொண்டு விஜயகாந்திற்கு உதவ முன்வருகிறார்.

சி.டி.யைக் கைப்பற்றிய விஜயகாந்த் தன்னிடம் இருக்கும் சி.டியை வைத்து முதல்வரை மிரட்டி ஏழை கிராம மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களைத் திருத்துவது, தேர்தலில் தகுதியானவர்களுக்கு சீட் கிடைக்கச் செய்வது போன்ற ஏகப்பட்ட நல்ல காரியங்களை நாட்டு மக்களுக்குச் செய்கிறார். விஜயகாந்த் தூண்டுதலினால் வேண்டா வெறுப்பாக மக்கள் நலப்பணிகளை செய்யும் ஷாயாஜி ஷிண்டே தேர்தலில் அபார வெற்றி பெறுகிறார். விஜயகாந்த் தனக்குக் கொடுத்த தொல்லைகளை மனதில் வைத்து
அவரைப் பழிவாங்கப் போகிறார் என்று  நினைக்கும் வேளையில் திடீரென்று திருந்திவிடுகிறார் முதல்வர். முன்னாள் முதல்வரைக் கொன்ற வழக்கில் ஷாயாஜி ஷிண்டேக்கு தண்டனை கிடைக்கிறதா? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

"லேட்டா வரலை.. கரெக்டான டயத்திற்கு தான் வந்திருக்கேன்..", "பணம், பதவி எல்லாம் நீங்க எனக்குத் தரவேண்டாம்.. அதெல்லாம் மக்கள் எனக்குத் தருவாங்க.." என்றெல்லாம் டயலாக் பேசி அறிமுகமாகிறார் கேப்டன். பொதுக்கூட்டங்களில் தான் பேசிய, பேச நினைக்கும் அத்தனை டயலாக்குகளையும் படத்தில் பக்கம் பக்கமாக பேசித் தள்ளியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் வழக்கமான விஜயகாந்த் ஸ்டைல் இல்லாமல் ஆங்கிலப்படங்களைப் போன்ற காட்சிகளை வைத்த ஸ்டண்ட் மாஸ்டரை என்ன திட்டினாலும் தகும்.. அந்த அளவிற்கு
கொடுமை. அதைப் போலவே அவரது காதல் காட்சிகள்..

கருணாஸின் காமெடி அரசியல் நெடி வீசும் படத்தில் ஒரே ஆறுதல். உண்ணாவிரதம் இருக்கும் கூட்டத்திற்கு எதிரே கருணாஸ் செய்யும் வேலையும், வாசு கருணாஸின் செல் போனில் பணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவரது செல்லை ஒருவழியாக்குவதும் சூப்பர் சீன்கள்.

துப்பறியும் நிபுணராக வரும் மனோஜ்.கே.ஜெயன் விஜயகாந்தை கண்டுபிடிக்கும் காட்சி சரியான காமெடி. இந்தக் காட்சிகளில் எல்லாம் லாஜிக்கை டன் டன்னாக கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர். கேப்டனின் முறைப் பெண்ணாக ஆஷிமா.. அவரைத் துரத்தித் துரத்தி காதலிப்பதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யாத நாயகி. தாத்தாவாக நம்பியார். சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. மன்சூர் அலிகான், அலெக்ஸ் போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

வில்லன்களாக வரும் ஷாயாஜி ஷிண்டேவும், அவரது அரசியல் ஆலோசகராக வருபவரும் பெரிதாக வில்லத்தனத்தில் ஏதாவது செய்யப்போகிறார்கள் என்று நினைத்தால் ஒன்றுமே செய்யாமல் ஏமாற்றுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். இயக்குனர் ஜேப்பி.ஏ.ஒய் யின் முதல் படம். அறிமுகப் படத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய வாய்ப்பில்லாமல் போனாலும் அடுத்து வரும் படங்களிலாவது இவர் சொல்லிக்கொள்ளும்படியாக ஏதாவது செய்வார் என்று நம்புவோம். மொத்தத்தில் சுதேசி - கேப்டனின் முதல் பிரச்சாரப்படம்.. அவ்வளவே.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |