மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
தராசு : ஒழித்து கட்டுங்கள் சுயநலவாதிகளை
- மீனா
| Printable version |

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நாள்தோறும் எதிர்கட்சிகள் ஏதாவது நெருக்கடிகள் கொடுக்கிறார்களோ இல்லையோ கருணாகரனும் அவரது குடும்பத்தினரும் தினமும் ஒரு பிரச்சனையை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். தன்னையோ தன் குடும்பத்தினரையோ தவிர வேறு யாராவது கேரள காங்கிரஸில் முக்கியத்துவம் பெற்றால் உடனேயே பிரச்சனைகளையும் தனிமனிதத் தாக்குதல்களையும் ஆரம்பித்துவிடுகிறார் கருணாகரன்.

தற்போதைய லேட்டஸ்ட் பிரச்சனை - ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான். இதை எழுப்பியுள்ளவர் கருணாகரனின் மகன் முரளீதரன். தன்னுடைய கட்சிக்கே ஏகப்பட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் தன் அப்பாவையை பின்னுக்குத் தள்ள நினைப்பவர்.

கேரளாவில் நேர்மையான ஆட்சியை வழங்கியவர் என்று மக்களால் பெருமளவில் பாராட்டப்பட்ட அந்தோணியின் மீது இதே ரீதியில் ஏகப்பட்ட புகார்களைக் கூறி ராஜினாமா செய்ய வைத்தனர் அப்பாவும் மகனும். அந்தோணிக்குப் பிறகு ஓரளவிற்கு நேர்மையான முறையில் ஆட்சி செய்து வருகிறார் உம்மன் சாண்டி. தற்போது அவரையும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட சுயநலவாதிகளை அரசியல் ஆதாயத்திற்காக இன்னமும் கட்சியில் வைத்துக்கொண்டிருக்கும் சோனியா காந்தியை மட்டுமே நாம் தற்போது சாட்டவண்டும். எங்கே கருணாகரனை கட்சியை விட்டு அனுப்பிவிட்டால் ஓட்டுகளை சிதறடித்து விடுவாரோ என்ற பயத்தில் அவரை இன்னமும் கட்சியில் வைத்து அவ்வப்போது அவர் ஏற்படுத்தும் நெருக்கடிகளை சமாளிக்கிறாரே இவரை என்னவென்பது?

தன் கட்சியைச் சேர்ந்த பிரமுகரையே அடக்க இயலாதவர்கள் எப்படி மாநிலத்தை திறமையாக ஆள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவது சகஜமே. கருணாகரனின் இத்தகைய வேலைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருப்பதாலேயே கேரளாவில் காங்கிரஸ் தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. எனவே சுயநலம் பார்க்காமல் கருணாகரன் போன்ற உட்கட்சி சுயநலவாதிகளை களையெடுக்க சோனியா முன்வரவேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் கவுரவம் கொஞ்சமாவது பாதுகாக்கப்படும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |