Tamiloviam
மார்ச் 29 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தொடரும் துயரங்கள்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியும், அரசு வேலைவாய்ப்பும் தரப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும்  காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க அதிவேக விசைப்படகும் வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு பொதுவாக 1 லட்சமோ இரண்டு லட்சமோ தான் உதவிப் பணம் தரப்படும் என்ற நிலையில் 5 லட்சம் தந்திருப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு உதவிப்பணம் வழங்குவது ஒரு நிரந்தர தீர்வாகாது என்பதை முதல்வரும் மற்ற கட்சியினரும் எப்போது உணரப்போகிறார்கள்? கட்சி மாற்றி கட்சி மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அறிக்கை விடுகிறார்களே தவிர இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணுமாறு மத்திய அரசை ஒருவருமே நிர்பந்திக்கவில்லை. தமிழக அரசியல்வாதிகளே இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மத்திய அரசும் இப்பிரச்சனையில் மெத்தனமாக இருக்கிறது.

இலங்கை அரசிடம் பேசி இதற்கான ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த தமிழக அரசால் நிச்சயம் முடியாது.. அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். தங்கள் கட்சிப் பிரமுகர் பாதிக்கப்பட்டால் - தங்களுக்கு வேண்டும் என்றால் உடனே மத்திய அரசிடம் பேசி காரியத்தை சாதிக்கத் தெரிந்த நம் தமிழகத் தலைவர்கள் இந்த விஷயத்தில் பட்டும் படாமலும் இருப்பது ஏன்?

மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. இடஒதுக்கீடு பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்று மீனவர்கள் கொல்லப்படும் பிரச்னையும் உள்ளது. இதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டால் இது போன்ற பொதுப் பிரச்னைகளில் எப்போதுமே நம்மால் ஒரு தீர்வு காணமுடியாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.  பிரச்சனையை மேலும் வளரவிடாமல் விரைந்து செயல்படுவார்களா? இல்லை வழக்கம் போல அறிக்கைகளுடன் நிறுத்தி விடுவார்களா ?

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |