மார்ச் 31 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
சிறுகதை
அறிவிப்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
கவிதை : நெஞ்சமெனும் திரையில் ...
- சத்தி சக்திதாசன்
| Printable version |


நேற்றொரு நாடகம்
நேசத்தின் புதுமுகம்
நெருஞ்சியாய் தைத்தது
நினிவினில் முள்ளது

நெஞ்சமெனும் திரையில்
நீண்டதொரு நாடகம் !

கரும்பின் சுவையது
கக்குவது நாக்கினில்
கசக்கும் வேப்பம்பூ
கசியும் உள்ளமதில்

நெஞ்சமெனும் திரையில்
நீண்டதொரு நாடகம் !

இருளகற்றும் வெளிச்சம்
இருப்பது கைவிளக்கில்
இதயம்தனை நிறைப்பது
இருட்டான நினைவுகள்

நெஞ்சமெனும் திரையில்
நீண்டதொரு நாடகம் !

பார்ப்பது நாடகமென
பாமரனுக்கும் புரிந்தால்
பாசத்தை விலைபேசும்
பாவியரின் திரையகலும்

நெஞ்சமெனும் திரையில்
நீண்டதொரு நாடகம் !

ஊருக்கும் மறைத்திடலாம்
உறவுக்கும் ஒளித்திடலாம்
உண்மையின் உருவமதை - உன்
உள்ளம் அறிந்திடாதா ?

நெஞ்சமெனும் திரையில்
நீண்டதொரு நாடகம் !

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |