கமலா: குத்து சண்டை வீரரை கல்யாணம் கட்டிக் கிட்டியே எப்படி இருக்க?
விமலா: அத ஏன் கேட்குற, எதுக்கெடுத்தாலும் ‘குத்திக் குத்தி” பேசுறாரு.
நான் இது வரை 100 கல்யாணம் பண்ணி இருக்கேன்.
அடப்பாவி இன்னுமா போலீஸ்ல மாட்டாம இருக்க.
யோவ் நான் ரிஜிஸ்டர் ஆபிசில் வேலை பார்க்குறேன்யா.
இந்த ஊர்ல நடக்கற பஞ்சாயத்து ஹை டெக்கா இருக்கும்.
எப்படி
தீர்ப்பை இ-மெயில்ல தான் அனுப்புவாங்க.
24 மணி நேரமும் எப்.எம். ரேடியோவில பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்த உன் மகன் இப்போ என்ன செய்யுறான்.
சிரிக்கிறான்..... சிரிக்கிறான்.. சிரிச்சுக்கிட்டே இருக்கான்.
நானும், என் புருஷனும் ஒரே தட்டுல தான் சாப்பிடுவோம்.
பிறகு ஏன் பிரிஞ்சிங்க..?
தட்டை யார் கழுவுறதுங்குற சண்டையில தான்.
??????
|