ஏப்ரல் 15 2005
தராசு
வ..வ..வம்பு
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மஜுலா சிங்கப்புரா
கவிதை
நியுஜெர்சி ரவுண்டப்
அறிவிப்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
தராசு : தேவை நமக்கு நாமே திட்டம்
- மீனா
| Printable version |

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வீடுகளில் பேய் நடமாட்டம் இருப்பதாக கிளம்பியுள்ள வதந்திகளைப் பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தும் இந்த பீதியிலிருந்து மக்களை விடுவிக்க ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தவிக்கிறது ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதைப் பற்றி ஆராய கூடிய கூட்டம் ஒன்றில் இந்தப் பேய்கதைகளைக் கிளப்பிவிட்டு மக்களை ஆளும் அரசுக்கு எதிராகத் திருப்பிவிடப் பார்கிறார் சந்திரபாபு நாயுடு என்று ஒரு புதுக்குண்டைப் போட்டுள்ளார் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.

தங்கள் ஆட்சியில் தங்களுக்கு விரோதமாக என்ன நடந்தாலும் அதற்கான பழியை எதிர்கட்சிகளின் மீதும் அடுத்த மாநிலத் தலைவர்கள் மீதும் போடுவதே நம் அரசியல்வாதிகளின் வேலையாகப் போய்விட்டது. பிரச்சனைகளின் உண்மையான காரணத்தைப் பற்றி ஆராய எந்த முயற்சியுமே செய்யாமல் அடுத்தவர்களின் மீது பழியைப் போடுவதும், சுமூகமாகத் தீர்க்க வேண்டிய விஷயங்களை சிக்கல் மற்றும் குழப்பத்தின் உறைவிடமாக்குவதும் இவர்களுக்கு கைவந்த கலை. இது எல்லா மாநில அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். யாரும் இதற்கு அப்பாற்பட்டவர் இல்லை.

ஆந்திராவைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தின் தலையாய பிரச்சனையான நக்ஸலைட்டுகள் பிரச்சனையைத் தீர்க்க சந்திரபாபுவாலும் முடியவில்லை - தற்போதையை முதல்வராலும் முடியவில்லை. தினம்தோறும் நக்ஸலைட்டுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒருவரை ஒருவர் குறைகூறுகிறார்களேத் தவிர பிரச்சனையைத் தீர்க்க உண்மையாக ஒருவரும் முயலவில்லை.

அதைப் போலவே காவிரி நீரைப் பெறுவதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலேயே தற்போது கொஞ்சமாக வந்துகொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆந்திர அரசின் மீது வழக்கு தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழக முதல்வர். இதன் விளைவால் வந்து கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நீரும் வராமல் போகப்போகிறது என்று தி.மு.கவும், காவிரி விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று தமிழக முதல்வரும் ஒருவர் மீது ஒருவராக புகார் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சண்டையின் விளைவு - ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழகம் மேலும் தண்ணீருக்காக வாடி வதங்கப் போகிறது.

மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கும் வரைதான் தங்களது வாய் ஜம்பம் பலிக்கும் என்ற நினைப்பிலேயே பிரச்சனைகளைத் தீர்க்க எந்த அரசியல் தலைவரும் முயற்சி செய்வதே கிடையாது என்பதே உண்மை. காவிரி விஷயத்தில் இரு மாநில மக்களும் முழுமனதோடு ஒன்று கூடிப் பேசியிருந்தால் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வந்து பலவருடங்களாகியிருக்கும். நம் நாட்டிற்கு தற்போதைய உடனடி தேவை - நல்ல பஞ்சாயத்து தலைவர்களே தவிர அரசியல் தலைவர்கள் அல்ல. அரசியல்வாதிகளை நம்பாமல் நமக்கு நாமே திட்டத்தை அனைத்து விவகாரங்களையும் தீர்க்க மக்கள் பயன்படுத்தினாலே போதும் - பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய சுபம் போடலாம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |