ஏப்ரல் 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : மெர்க்குரி பூக்கள்
- மீனா [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Srikanth,Meera Jasminதிருமணத்தில் இஷ்டமே இல்லாத இருவர் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. ஒருவழியாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழப்போகும் சயமத்தில் பெற்றோர் பிடிவாதத்தால் பிரிகிறாரள். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? இல்லையா என்பதே மெர்க்குரிபூக்களின் கதை.

சென்னையில் படிக்கும் ஸ்ரீகாந்த் - இவரின் அப்பா டெல்லி கணேஷ், திருச்சியில் படிக்கும் மீரா ஜாஸ்மின் - இவரின் அப்பா பிதாமகன் மகாதேவன். மகளுக்கு சென்னை மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைக்கும் மகாதேவன் தன் நண்பனான டெல்லிகணேஷிடம் உதவி கேட்க சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஸ்ரீகாந்தின் குணத்தால் கவரப்படும் மகாதேவன் ஸ்ரீகாந்திற்கே திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அப்பாக்களின் கட்டாயத்தினால் கொஞ்சம் கூட இஷ்டமே இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ஸ்ரீகாந்தும் மீராஜாஸ்மினும். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சமிக்ஷ¡வை ஒருதலையாக ஜொள்ளுவிடும் ஸ்ரீகாந்த் முதலிரவிலேயே மீராவிடம் முறைக்க, பதிலுக்கு மீராவும் முறைக்கிறார்.

ஒருகட்டத்தில் கட்டிய மனைவியையே காதலிக்க ஆரம்பிக்கிறார் ஸ்ரீகாந்த். மீராவிடம் தன் காதலை அவர் சொல்ல வரும் வேளையில் மீராவின் அப்பா மகாதேவன் தன் மகளை சரியானபடி ஸ்ரீகாந்த் வைத்துக்கொள்ளவில்லை என்று டெல்லிகணேஷிடம் சண்டை போட்டுவிட்டு மகளை அழைத்துக்கொண்டு போய்விடுகிறார். கஷ்டப்பட்டு திருச்சி சென்று ஸ்ரீகாந்த் மீராவை தன் வீட்டிற்கு அழைத்துவரும் போது மீராவை வீட்டுக்கொள் சேர்க்க டெல்லிகணேஷ் மறுக்கிறார். போதாத குறைக்கு மீரா ஸ்ரீகாந்த் இருவரும் தங்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேற்றுமையால் சண்டை வேறு போடுகிறார்கள். கல்யாணம் ஆன பிறகும் காதலர்கள் போல அவஸ்தைப்படும் மீரா ஸ்ரீகாந்த் ஜோடி என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

கிட்டத்தட்ட சண்டைகோழி படத்தைப் போலவே அறிமுகமாகிறார் மீராஜாஸ்மின். ஆனால் போகப்போக வித்தியாசமான தனது நடிப்பால் அசத்துகிறார். திருமணம் ஆன புதிதில் ஸ்ரீகாந்துடன் சண்டை போட்டாலும் ஸ்ரீகாந்தின் அன்பிற்காக அவர் ஏங்குவதும், தன் கணவனை அப்பா மரியாதையில்லாமல் நடத்துகிறார் என்பதற்காக அப்பாவிடம் சண்டை போடுவதும், வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளத் துடிக்கும் ஸ்ரீகாந்திடம் கோபத்தில் பொரிந்து தள்ளும் போதும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

மீராவின் நடிப்புடன் ஒப்பிடும்போது ஸ்ரீகாந்த் நடிப்பு சுமார் ரகம் தான். தத்துபித்தென்று மனைவியிடம் வழியும்போதும், மகாதேவனிடம் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசும்போதும் கொஞ்சம் எரிச்சலை கிளப்புகிறார். கருணாஸ் காமெடியில் கொஞ்சம் சுமாராகத் தான் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே தன் காதலியைத் தான் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி விவரித்து நொடி நேரத்தில் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்கிறார்.

டெல்லிகணேஷ் மற்றும் மகாதேவன் இருவருமே நல்ல அப்பாக்களாக வந்து உயர்கிறார்கள். அதிலும் குறிப்பாக மகாதேவன். ஸ்ரீகாந்தின் குணத்தைப் பார்த்து அவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்யும்போதும், தன் மகளை ஸ்ரீகாந்த் சரியாக நடத்தாததை பார்த்து குமுறி மகளை தன் வீட்டிற்கே அழைத்துச் செல்லும் போதும் நடிப்பில் மிளிர்கிறார். சமிக்க்ஷ¡ - சும்மா வெத்து பொம்மை.

கார்த்திக்ராஜா இசையைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. ஆங்காங்கே கதையில் சிலபல குளறுபடிகள் இருந்தாலும் மொத்தத்தில் ஆக்ஷன் இல்லாத ஒரு சாதாரண குடும்பப்படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஸ்டான்லி.

| |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |