Tamiloviam
ஏப்ரல் 23 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : தேர்தல்களம்!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]
  Printable version | URL |

 

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது!
அணிமாற்றங்களும் தாவல்களும்
நிகழ்ந்த வண்ணம்
கூட்டணிகள்!

முன்னர் போற்றப்பட்டோர் தூற்றப்படவும்
தூற்றப்பட்டோர் போற்றப்படவுமாய்
மாற்றமே இல்லா
அரசியல்வாதிகள்!

ஒற்றைப்படையில் தொகுதிகள் கிடைக்கப்பெற்றாலும்
தேசியகட்சிகளுக்கிணையாய்
தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும்விடுக்கும்
மாநிலகட்சிகள்!

இதர மாநிலங்களிலும்
இலவசங்கள் மற்றும்
சலுகைகளின் அறிவிப்பு!
வழிகாட்டியாய் தமிழகம்!

வானளாவிய அதிகார அதிபதிகள்
தன்னிச்சையாய்ப்பிச்சை பொடுதற்கும்
வீட்டுச்செலவுக்குக்காசு கொடுக்கும் முன்கூட
சுற்றும் முற்றும்பார்க்கவைக்கும்
தேர்தல் கமிஷன்!

யோக்கியர்களில் யோக்கியரைத்
தேர்ந்தேடுத்தகாலம்மாறி
அயோக்கியர்களில் யோக்கியர்களைத்
தேர்ந்தெடுக்கும் நிலையில்
பெரும்பான்மை வேட்பாளர்கள்!

வெற்றி பெறப்போவது
ஐந்தறிவாளர்களா?
ஆறறிவாளர்களா?
வாக்காளரின்
ஆறாம் அறிவைப்பொறுத்தது!!

oooOooo
                         
 
கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |