ஏப்ரல் 27 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : அட்சய திருதியை
- மீனா [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்று எந்த புண்ணியவான் எப்போது கூறினாரோ தெரியாது.. ஆனால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நகைக்கடைக்காரர்கள் செய்யும் விளம்பரங்கள் மற்றும் கொடுக்கும் சலுகைகள் எத்தனை எத்தனை?  அவ்விளம்பரங்களில் நன்றாக ஏமாந்து மக்கள் அத்தினத்தில் வாங்கிக் குவிக்கும் நகைகள் தான் எத்தனை? இந்த ஆண்டு அட்சயத் திருதியை நாளில் மட்டும் தமிழகத்தில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம். தங்க வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் மக்கள் அன்று இத்தனை தங்கம் வாங்கியுள்ளார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது? வளம் கொழிக்க வேண்டிய வாழ்வு போய் அன்று தங்கம் வாங்க இவர்கள் படும்பாடு வாழ்வை நரகமாக்குகிறது.

புராணக் காலங்களில் சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாள் புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். வேத காலங்களில் எல்லாம் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், முடிந்தால் அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை. அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல அவர்களது நோக்கம்..

வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்க  வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள்.. பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும். அதை விடுத்து விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து எப்பாடு பட்டாவது அட்சயத்திருதியை அன்று நாம் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பில் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதல்ல.

|
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |