|

அமெரிக்காவில் 'சென்னை பொன்னுசாமி'
தரமான தென்னிந்திய அசைவ உணவு வேண்டுமா? இங்கே வாங்க!!
செட்டிநாடு ஸ்பெஷலா? நிமிடங்களில் தயார்!!
சிக்கன் 65? இதோ ரெடி!!
தரமான செட்டிநாடு உணவு வகைகளை ருசிக்க வாருங்கள் 'சென்னை பொன்னுசாமி' க்கு என்று அழைக்கிறார் இதன் உரிமையாளர் பன்னீர். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உணவகம் நடத்தி வருகிறார்.
பென்சில்வேனியா பெண்சைலத்தில் உடுப்பி ஹோட்டல், கடந்த வாரம் மத்திய நியுஜெர்சியில் (Rt.27, next to Hot breads) அமர்களமாய் தொடங்கிய 'சென்னை பொன்னுசாமி' இதில் அடக்கம். இது தவிர கிழக்குகரையில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவகங்கள் திறக்கும் எண்ணமும் இவருக்கு இருக்கிறது.
தென்னிந்திய உணவகங்கள் என்றாலே வெறும் சைவ சாப்பாடுதான் என்று அலுத்துக்கொள்ளும் அன்பர்கள் இனி செட்டிநாடு சிக்கனையும், நண்டையும் ஒரு பிடிபிடிக்கலாம். " எங்களது மெனு கார்டை பார்த்தாலே பசிக்காதவருக்கும் பசி எடுக்கும். மேலும் நியாயமான விலையில் தரமான உணவு மற்றும் விரைந்த/சிறந்த சேவை மட்டுமே எங்களது குறிக்கோள்.. ஒரு முறை எங்கள் உணவகத்திற்கு வருபவர்களை மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் எங்களது உணவின் சுவை.." என்கிறார்கள் பொன்னுசாமி ஹோட்டல் நிர்வாகத்தினர்.
சைவ பிரியர்களுக்காக இட்டிலி,பொங்கல் போன்று சைவ உணவு வகைகளும் கிடைக்கிறது. சைவம் - அசைவம் உணவுகளை பிரித்தே சமைக்கிறார்கள். 'சில்லி பன்னீர்', 'செட்டிநாடு வெஜ்ஜி' வகைகளில் இவர்களின் தனி முத்திரை தெரிகிறது.
அட இன்னும் என்ன யோசனை.. ஒரு ரவுண்டு வந்துதான் பாருங்களேன்..!!
http://chennaiponnusamyusa.com/

|