Tamiloviam
மே 10 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : கருத்துக்கணிப்புகள் தேவையா?
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

சட்டமன்றத்தில் பொன்விழா காணும் நேரத்தில் தன் கட்சிக்கு தன் குடும்பத்தினராலேயே இத்தகைய அவப்பெயர் வருமென்று முதல்வர் நிச்சயம் எதிர்பாத்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிவிட்டது தினகரனின் கருத்துக்கணிப்புகளும் அதைத்
தொடர்ந்து நடந்த வன்முறைகளும்.

கருத்துக்கணிப்புகள் என்றாலே பொதுவாக தேர்தல் சமயத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்ற வழக்கம் மாறி தொட்டதற்கெல்லாம் கருத்துக்கணிப்பு நடத்துவது என்பது தற்போது சகஜமாகிவிட்டன. ஆனாலும் ஒரு கருத்துக்கணிப்பின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.. ஏனெனில் கருத்துக்கணிப்புகள் என்பவை சமுதாயத்தின் ஒட்டுமொத்த கருத்து அல்ல.. ஒரு சிலரின் கருத்து மட்டுமே. இதை மக்களும் அரசியல் கட்சிகளும் சரிவரப் புரிந்துகொண்டிருந்தால் இத்தகைய கலவரங்கள் வெடித்திருக்காது.

தயாநிதி மாறன் தான் சிறந்த அமைச்சர் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறியதால் மட்டும் அவரை சிறந்த அமைச்சராக ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த உண்மை பா.ம.க தலைவருக்கு புரியாமல் போனது ஏன்? இதை விடக்கொடுமை முதல்வரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கருத்துக்கணிப்பு முடிவிற்காக மதுரையில் நடந்த கலவரங்களும் அதன் விளைவாக மூன்று பேர் பலியானதும்.
எத்தனையோ தேர்தல்களில் கருத்துக்கணிப்புகளுக்கு நேர்மாறான முடிவுகள் வெளியானதை பார்த்தும் - அனுபவப்பட்டும் உணர்ந்த தலைவர்கள் அமைதி காக்கத்தவறியதன் விளைவுதான் தி.மு.க விற்கு தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்திற்கான காரணம். பத்திரிக்கையாளர்களின் நெருங்கிய நண்பனாகத் தன்னைக்காட்டிக்கொள்ளும் முதல்வர் இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட பத்திரிக்கை குறித்து வெளியிடும் அறிக்கைகள் நிச்சயம் அவரது அனுபவத்திற்கு உகந்ததல்ல. ஒரு கருத்துக்கணிப்பால் தனது அரசியல் வாரிசை நிர்ணயம் செய்யும் அளவிற்கா அவரது கட்சி உள்ளது? பின் எதற்காக இந்த தேவையற்ற கொந்தளிப்பு?? ஜெயலலிதாவிற்குப் பிறகு யார் அவரது வாரிசாக வரவேண்டும் என்ற கருத்துகணிப்பு நடைபெற்றபோது மு
தல்வர் கருணாநிதிக்கு கற்கண்டாக இனித்த அந்த நாளிதழ் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கேள்வி எழுப்பியவுடன் கசந்து போனது ஏன்?

கருத்துக்கணிப்புகள் தேவையற்றவை - வன்முறையைத் தூண்டும் வண்ணம் அமைகின்றன என்பது போன்ற வாதங்களை விட்டுவிட்டு மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் - தாங்கள் செய்வது சரியா தவறா போன்ற உண்மைகளை தெளிவாக எப்போது நம் தலைவர்கள் உணர ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் நாட்டில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது நிற்கும் - குறைந்தபட்சம் குறையவாவது
செய்யும்.

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |