Tamiloviam
மே 10 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பரட்டை என்கிற அழகு சுந்தரம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

இன்று இருக்கும் நடிகைகளில் ஓரளவிற்கு நடிக்கத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான மீராவிற்கு இந்தப்படத்தில் இயக்குனர் நடிக்க வாய்ப்பே தரவில்லை.

அர்ச்சனாவின் செல்ல மகன் தனுஷ். திருநெல்வேலியில் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த சூதுவாது தெரியாத பிள்ளை. ஒரு பொறுப்பும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் தனுஷ் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் அப்பா லிவிங்ஸ்டன் திடீரென்று இறந்துபோக நிலைகுலைந்து போகின்றார். எந்த ஒரு விஷயமானாலும் தைரியமாக தனக்கு ஆறுதல் சொல்லி தேற்றும் தன் அம்மா அர்ச்சனாவே நிலைகுலைந்துப் போவதைப் பார்த்து மனம் உடைந்து போகிறார் தனுஷ். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தனுஷ் ஏதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நண்பன் சந்தானத்தைத் தேடி சென்னை வருகிறார்.

dhanush, archanaசந்தானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடும் தனுஷிற்கு டீக்கடை வைத்திருக்கும் நாசர் புகலிடம் கொடுக்கிறார். செய்யாத ஒரு கொலைக்காக கைதாகி ஜாமினில் வெளியே வரும் தனுஷ் தன் சொந்த ஊருக்கே திரும்பிப் போக முடிவு செய்யும் வேளையில் சில ரவுடிகளுடன் அநாவசியமாக ஏற்படும் தகராறில் அவர்களின் தலைவனைப் போட்டுத்தள்ளுகிறார். ரவுடியைக் கொன்றதில் பெரிய ரவுடியாகும் தனுஷிற்கு பரட்டை என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. ரவுடித் தொழிலை தனுஷ் வெறுத்தாலும் அதிலிருந்து விலக முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இதற்கிடையே மகனைத் தேடி சென்னை வரும் அர்ச்சனா தனுஷைக் கண்டுபிடிக்க தனுஷின் நண்பன் சந்தானத்தின் உதவியை நாடுகிறார். என்னதான் தேடியும் மகனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஜெர்னலிசம் படிக்கும் மாணவி மீரா ஜாஸ்மின் அர்ச்சனாவிற்கு உதவுவதாக வாக்களிக்கிறார். பரட்டையான தனுஷை பலமுறை பார்க்கும் மீரா அவர்தான் அர்ச்சனாவின் மகன் என்பதை உணர்ந்துகொள்ளாமல் கோட்டைவிடுகிறார். அர்ச்சனாவைத் தேடி தனுஷ¤ம் தனுஷைத் தேடி அர்ச்சனாவும் களைத்துப்போகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

கிராமத்து அழகுசுந்தரமாக கொஞ்சூண்டு நடிக்கும் தனுஷ் பரட்டையாக மாறி ரொம்பவும் இம்சிக்கிறார். தனுஷின் சண்டை காட்சிகள் அப்படியே புதுப்பேட்டை படத்தின் ஜெராக்ஸ்.. அம்மாவுடனான தனுஷின் கொஞ்சல்கள் கொஞ்சம் ஓவர். ஆனாலும் ஒரு டஜன் ஆட்கள் வந்தாலும் ஒட்டடை குச்சி கணக்காய் இருக்கும் தனுஷ் தனி ஆளாய் அவர்களை துவம்சம் செய்வதைக் காட்டிலும் பாசமழை காட்சிகள் ரொம்பவே தேவலை. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான நடிப்பை வைத்து பிழைப்பை ஓட்டுவாரோ தெரியவில்லை.

Meera Jasmin, Archanaஜெர்னலிசம்  படிக்கும் மாணவியாக மீராஜாஸ்மின். தனுஷின் போட்டோ கைவசம் இருந்தும் பரட்டைதான் அழகுசுந்தரம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அதிபுத்திசாலியாக அவரை காட்டிய இயக்குனரை என்ன செய்வது ? இன்று இருக்கும் நடிகைகளில் ஓரளவிற்கு நடிக்கத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான மீராவிற்கு இந்தப்படத்தில் இயக்குனர் நடிக்க வாய்ப்பே தரவில்லை.

பாசமுள்ள அம்மாவாக அர்ச்சனா. மகனுக்காக டான்ஸ் ஆடுகிறார்.. மகன் மீது பாசத்தைப் பிழிகிறார். கிராமத்து தாயின் அப்பாவித்தனத்தை அப்படியே காட்டுகிறார். இருந்தாலும் ஏதோ ஒரு நெருடல்.. அப்பாவாக லிவிங்ஸ்டன் - நட்புக்காக நாசர்.. இவர்கள் நடிப்பெல்லாம் வீணாகப்போனதைப் போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

பிக்பாக்கெட் பார்ட்டியாக வரும் சந்தானம் காமெடியில் ஓரளவிற்கு கலக்குகிறார். அதே நேரத்தில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். காதல் தண்டபாணி, ஆதித்யா, சூர்யன் என்று ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும் கூச்சல் போடுவதைத் தவிர்த்து ஒருவரும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

குருகிரன் இசையில் பாடல்கள் எல்லாம் ரொம்ப சுமார். பாட்ஷா கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா இந்தப்படத்தின் இயக்குனர் என்று நினைக்கும் அளவிற்கு கதை - திரைக்கதை - இயக்கம் என்று எல்லாமே ரொம்ப ரொம்ப சுமார்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |