|
செய்தி :
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்க மேற்கு வங்க அரசு நிலம் வழங்கியுள்ளது. கிரிக்கெட் பயிற்சி மையம் கட்டியது போக எஞ்சியுள்ள நிலத்தில் சினிமா தியேட்டர் கட்ட திட்டமிட்டுள்ளார்.
இனி பொய்தி :
தியேட்டர் விஷயம் கொஞ்சம் புதுசாச்சே அதனால எப்படி கட்டலாம் என்று கோலிவுடில் சிலரிடம் ஐடியா கேட்கிறார்.
விஜய் : அண்ணா, நமக்கு எதுக்குனா இந்த ரிஸ்கெல்லாம். கிரிகெட்லயே ரொம்ப ரிஸ்க் எடுக்காமதான்ணா ஆடுவீங்க. பேசாம ஒரு கல்யாண மண்டபம் கட்டுங்க. திருட்டு விசிடி,டிவிடில படம் பார்த்தாலும் கண்ணாலம் கட்டிக கல்யாண மண்டபம் வருவாங்க.
விஜயகாந்த் : கல்யாண மண்டபம் கட்டலாம் தப்பில்லை, ஆன எந்த ஹைவேவும் குறுக்கே வர்றாம பாத்து கட்டு. இல்லேன்னா பசங்க படிக்க ஒரு காலேஜ் கட்டு. ஐஞ்சே வருசத்துல போட்டதை எடுத்துடலாம். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.
விஜய டி.ஆர் : ஏய் கங்குலி, நீ ஒரு பெங்காலி, சிம்பு முன்னால நீ சுண்டலி, அவனை கூட சேர்த்துக்கிட்டா நீ அவன் பங்காளி இல்லேனா நீ காலி.
கமல் : எதுக்கு கங்குலி அதெல்லாம். போட்ட பணத்தை எடுக்க ரொம்ப வருஷம் ஆகும். பேசாம அதை அப்படியே மருதநாயகத்துல இன்வெஸ்ட் செஞ்சா, நான் படத்தை எடுத்தவுடனே டபுள் ஆயிடும். தமிழன்தான் நன்றிய மறந்துட்டான், ஆனா நான் கண்டிப்பா பெங்காலில "தண்யபாத்" சொல்லுவேன்.
சூப்பர் ஸ்டார் : கங்குலிஜி நான் சிவாஜில ரொம்ப பிசியா இருக்கேன், அது முடிஞ்ச பிறகு அழுக்கு வேட்டில நம்ம பாபாஜிய பார்க்க ஹிமய மலை போவேன், அப்போ கூட வாங்களேன் எப்படி செய்யலாம்னு சொல்லறேன்.
அஜித் : நான் ரொம்ப அதிகம் பேசமாட்டேன். தியேட்டரெல்லாம் வேணாம், ஒரு மாசம் கஷ்டபட்டு 17 கிலோ எடை கொறஞ்சீங்கனா இந்தியன் டீமில அடுத்த ரவுண்டு வர்லாம். இதுக்கு மேல நான் பேசனும்னா என் அடுத்த படம் ஹிட் ஆன அப்புறம் வந்து பாருங்க.
பேரரசு : நம்ம அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோ. படத்துல(யும்) உங்களுக்கு சரியா கிரிகெட் ஆட வர்றாது. ஆனா விளையாடனும்னு ரொம்ப ஆசை. திருப்பதில பிரவத்துக்கு இலவசம்னு மெசேஞ் சொன்ன மாதிரி, கிரிக்கெட் சரியா விளையாடலைனாலும் டீமுல சேர்க்கணும்னு ஒரு மேட்டரை எடுத்து வுடுவோம்.
கார்த்திக் : மிஷ்டர் கங்கு, நான் என்ன ஷொல்றேன்னா பேஷாம நம்ம கட்சியில சேர்ந்துங்க. தலைவர் கிட்டே ஷொல்லி உங்களையும் உருப்புடாம ஷெய்றேன். என்ன ஷொல்றீங்க.
பாக்யராஜ் : இப்படிதான் ஒருத்தனை ஒரு நாய் கடிச்சுதாம். வலி பொறுக்க முடியாம வழியில வந்த ஒருத்தன் கிட்டே என்ன செய்யலாம்னு கேட்டானாம். அவனும் உடனே "நாய் கடிச்ச இடத்துலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து அதை ஒரு ரொட்டி துண்டில் விடு. அப்புறம் அந்த ரொட்டி துண்டை நாய்க்கு போடு. அது அந்த ரொட்டிய திண்டுச்சுனா உன் வலி சரியாயிடும்" அப்படின்னு அட்வைஸ் செஞ்சானாம்.
அது சரி என்ன கேள்வி கேட்டீங்க ?
எல்லா ஐடியாக்களையும் கேட்ட கங்குலி தலைதெறிக்க என்று ஓடுகிறார்.
|