பெயர்: சிம்ரன்
நிறம் : மாம்பழ கலர்
பிறந்த இடம் : முன்பு பாம்பேவாக இருந்த, தற்போதைய மும்பை மாநகரில்
படிப்பு: மிட்டி பாய் கல்லூரியில் பி.காம்.
பட்டப்பெயர்: இடுப்பழகி,
நடித்த படங்கள்: 50 க்கும் மேல்
சாதனை : எந்தக் கேரக்டர் என்றாலும் நடித்து அசத்துவதில், இவரை மிஞ்ச எந்த நடிகையும் இன்னும் வரவில்லை. காதல் பிசாசு என்ற பட்டம் பெற்றவர். இவரது இடுப்பு அசைவுக்கு மயங்கிய ரசிகர்கள் இன்று வரை எழுந்திருக்கவில்லை. தமிழ்நாட்டில் பணம் சம்பாதித்தாலும் மும்பையில் கொண்டு போய் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததில் இவர் வல்லவர். சமீபத்தில் ஒரு குழந்தை பெற்று தாயாகி, தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவரை அ.தி.மு.க.வினர் அப்படியே பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து விட்டனர். இவர் பிரச்சாரத்தில் 2 நிமிடங்களுக்கு மேல் பேசியதே கிடையாது. ஆனால் இவருக்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள கொடுக்கப்பட்ட சம்பளம் 50,000 என்கிறார்கள் உடன் பிறப்புக்கள். இதுவே பெரிய சாதனை தான்.
வேதனை : தனக்கு ரசிக மன்றங்கள் வைத்து வழிபட்டு வந்த ரசிக கண்மணிகளை அம்போவென்று விட்டு விட்டார். தமிழ் சினிமா பைத்தியங்கள் எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு திடீரென்று மும்பையைச் சேர்ந்த திலீப் என்பவரை திருமணம் செய்தது.
எதிரி : முன்பு ஜோதிகா, சிநேகா, லைலா, ராஜீ சுந்தரம் பின் கமல். இப்பொழுது தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன்.
பிடித்தது : நடனம் ஆடுவது, அதிலும் இடுப்பை ஒடித்து ஆடுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சமீபகாலமாக தனது குழந்தையை கொஞ்சுவது தான் மேடத்திற்கு பிடித்தமான ஒன்றாம். தமிழ் பத்திரிக்கை உலகில் தன்னைப் பற்றி கிசுகிசுக்கள் இன்னும் உலா வருவதைக் கேட்டு சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
பிடிக்காதது : தனது செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களை படிப்பதே பிடிக்காதாம். அதே போல தன்னை மும்பை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுவும் இவருக்கு பிடிக்காத ஒன்றாம்.
வேண்டுகோள்: மேற்சொன்ன அடையாளங்களோடு இருக்கும் ஆத்மாவை யாரும் பார்த்தாலோ, அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டாலோ தெரிவிக்க வேண்டிய முகவரி.
திடீரென்று காணாமல் போவோர் சங்கம், நடனமாடும் காலனி, ஒல்லிக்குச்சி இடுப்பழகிகள் தெரு, நடிப்பவர்கள் பட்டி, தத்தி தத்தி தமிழ் பேசுவோர் மாவட்டம். -- 333333
|