மே 26 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
புதிய தொடர்
துணுக்கு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
சிறுகதை
திரையோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கார் ஓட்டலாம் வாங்க
அடடே !!
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : கேப்டனுக்கு என்ன ஆச்சு?
-
| Printable version |

கடந்த சில நாட்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு தான். அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகள் - மக்களுக்கு அவர்களது நிஜ சொருபத்தை காட்டப் போகிறேன் - அதற்காகவே அரசியல் குதிக்க நான் ரெடி என்று ஆவேசமாக பேசிய விஜயகாந்த் இப்போது எதற்காக திடீரென்று கருணாநிதியைச் சந்தித்தார் என்று அவரது ரசிகர்கள் - கம் தோண்டர்கள் குமுறிக்கொண்டிருக்குறார்கள்.

படத்தில் மட்டும் அரசியல் வசனம் பேசினால் போதாது என்று நிஜ வாழ்கையிலும் ஒரு அரசியல்வாதியாக தயாராகிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் இப்பொழுதே ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகிவிட்டார் என்பதே தி.மு.க தரப்பு கமெண்டாக இருக்கிறது. தன்னுடைய சொந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவர் தி.மு.க தலைவரைச் சந்தித்தார் என்று மீடியாக்கள் செய்யும் விமர்சனங்களை விஜயகாந்த் தரப்பு மறுக்கவில்லை.. தேவையான விளக்கமும் அளிக்கவில்லை..

இந்த சந்திப்பினாலும் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களினாலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது விஜயகாந்தின் ரசிகர்கள் தான். செப்டம்பரில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்னவர் எங்கே ஜகா வாங்கி விடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் எத்தனை அரசியல் கனவுகளோடு அலைந்தார்களோ? எல்லாம் புஸ்வாணமாகப் போகிறதா இல்லை புயல் வேக நடவடிக்கை ஏதாவது விஜயகாந்த் தரப்பிலிருந்து எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் பதில் கிடைத்துவிடும். அப்போது பார்க்கலாம் நாட்டையும் மக்களையும் சுயநலவாதிகளிடமிருந்து காக்க அரசியல் குதிக்க ஆசைப்படும் கேப்டனின் நிஜ சொரூபத்தை..

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |