Tamiloviam
மே 29 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலின் .......
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செல்வாக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. அதீதமாக உயர்ந்து வரும் விலைவாசி, நாட்டில் பெருகிவரும் தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் விதத்தில் இந்த அரசு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் நாள்தோறும் தீவிரமாகிவருவதன் எதிரொலிதான் இந்த தொடர் தோல்விகள்.

பா.ஜனதாவிற்கு இந்துக்களின் கட்சி என்ற முத்திரையை குத்திவிட்டு நாங்கள் தான் சிறுபான்மை மக்களின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சி போட்ட வேஷமெல்லாம் குஜராத்திலேயே எடுபடவில்லை. ஆனாலும் அக்கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சிறுதும் முயலவில்லை  - கடந்த வாரம் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் உச்சநீதி மன்றத்தால் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை தூக்கிலடப்போவது சந்தேகமே என்ற ரீதியில் அளித்துள்ள பேட்டி அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Shivraj Patil"நாம் அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நாம் எப்போதுமே மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதையே விரும்புகிறோம். அங்கே சரப்ஜித்சிங்கை தூக்கில் போடாதே என்று கூறி விட்டு, இங்கே அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறோம். எப்படி இந்த கோரிக்கையை விடுக்க முடியும்? இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்." இதுதான் அவரது பேட்டியின் சுருக்கம்..

அப்சல் குரு ஒரு தீவீரவாதி.. பாராளுமன்றத்தில் குண்டு வைத்தவன் - அவன் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுதான் தூக்கு தண்டனையில் இருந்து விலக்குக் கேட்டிருக்கிறான். ஆனால் சரப்ஜித் சிங் விவகாரமோ ஒரு ஆள் மாறாட்ட விஷயம். மான் சிங் என்பவனுக்குப் பதிலாக இவரைப் போலீஸ் கைது செய்து குண்டு வழக்கில் சேர்த்திருக்கிறது. அப்சல் குரு விஷயத்தில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். அவனது குற்றம் கீழ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட், பெஞ்ச என்று அனைத்து தளங்களிலும் தீர விசாரிக்கப் பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சரப்ஜித் சிங் விஷயத்தில் அவருக்கு தண்டனையை வழங்கியது கீழ்கோர்ட் மட்டுமே. 18 ஆண்டுகள் ஒருவரை எந்த முகாந்திரமும் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்து பிறகு அவசர அவசரமாக தூக்கு தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது சரப்ஜித்திற்கு. அதுவும் உலக சட்டப்படி இல்லாமல் இஸ்லாமியச் சட்டப்படி தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அப்சல் குரு ஒரு முஸ்லீம் என்பதற்காக நமது சட்டம் அவனைத் தூக்கில் போட முயலவில்லை. அவன் ஒரு பயங்கரவாதி - அவனால் பலர் உயிரிழந்தார்கள்.. அதனால் தான் அவனுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் சரப்ஜித் சிங்கின் நிலை ? மேலும் அப்சல் குரு அடிப்படையில் ஒரு இந்தியன். இந்திய சட்டத்தின் படி அவன் இந்தியாவில் தண்டிக்கப்பட்டு இருக்கிறான். ஆனால் சரப்ஜித் சிங் ஒரு இந்தியராக இருந்தாலும் அவருக்கு செய்யாத குற்றத்திற்காக தண்டனை வழங்கியது பாக். அரசாங்கம். அதிலிருந்து கருணை காட்டத்தான் மற்றவர்கள் போராடுகிறார்கள். சரப்ஜித்தின் குற்றம் இன்று வரை நிரூபிக்கப்பட்டவில்ல. இந்த அடிப்படை வித்தியாசங்கள் கூட மத்திய உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் போனது நமது துரதிஷ்டம் தான்.

அப்சல் குரு ஒரு முஸ்லீம் என்று மட்டும் பார்க்காமல்  அவன் ஒரு தீவிரவாதி என்பதை நமது அரசியல்வாதிகள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. மேலும் அப்சல் போன்ற தீவிரவாதிகளை விடுதலை செய்துவிட்டு - இந்த அரசு முஸ்லீம்களின் நலனுக்காகப் பாடுபடுகிறது என்று சிவராஜ்பாட்டில் போன்றவர்கள் சொல்லப்போவதை நிச்சயம் தன்மானமுள்ள - நாட்டுப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லீமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மொத்தத்தில் ஓட்டுக்காக மிக உயர்ந்த பதவிகளில் இருந்து கொண்டே நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் இத்தகைய அரசியல்வாதிகள் திருந்தினால்தான் இந்தியா உருப்படும்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |